Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
மசாலா பிரட் உப்புமா
தற்போது பெரும்பாலானோர் வீடுகளில் பிரட் கொண்டு செய்யப்படும் சாண்ட்விச் தான் காலை உணவாகவும், ஸ்நாக்ஸாகவும் உள்ளது. அப்படி எப்போது பார்த்தாலும் சாண்ட்விச் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக, பிரட் கொண்டு உப்புமா செய்தால், நன்றாக இருக்கும். மேலும் இது ஒரு சிறப்பான காலை உணவாகவும், ஸ்நாஸாகவும் இருக்கும்.
குறிப்பாக மசாலா பிரட் உப்புமாவானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். அதிலும் மழைக்காலத்தில் சாப்பிட ஏற்றதாக இருக்கும். சரி, இப்போது மசாலா பிரட் உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பிரட் - 3-4 துண்டுகள் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் (விருப்பமிருந்தால்)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 'தாளிப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
தக்காளியானது நன்கு மென்மையானதும், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து மசாலாக்கள் அனைத்தும் ஒன்று சேரும் வரை வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் அதில் பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், மசாலா பிரட் உப்புமா ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
