Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பொலிவிழந்து இருக்கும் முகத்தை பளிச்சுன்னு மாத்தணுமா? அப்ப காபித் தூளை இப்படி யூஸ் பண்ணுங்க..
Coffee Face Masks For Glowing Skin In Tamil: கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்த்தாலே டல்லா தெரியுறீங்களா? உங்கள் முகத்தை பளிச்சென்று மாற்றுவதற்கான இயற்கை வழிகளை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் முகத்தை பொலிவாக்க நம் வீட்டு சமையலறையில் ஏராளமான பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் காபித்தூள்.

பொதுவாக காபி அனைவரும் புத்துணர்ச்சிக்காக குடிக்கும் ஒரு பானம். அப்படிப்பட்ட இந்த காபித்தூளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் காப்ஃபைன் சருமத்தை சுத்தம் செய்யவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும் உதவுகிறது. உங்களுக்கு காபித்தூளை எப்படி சருமத்தில் பயன்படுத்துவது என்று தெரிய வேண்டுமா? கீழே சரும பொலிவை அதிகரிக்க உதவும் சில காபி ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. தயிர் மற்றும் காபி மாஸ்க்
* இதற்கு ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. தேன் மற்றும் காபி பேக்
* இதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் காபித் தூளை எடுத்து, அத்துடன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி, சருமத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
3. தேங்காய் எண்ணெய் மற்றும் காபி ஸ்க்ரப்
* இதற்கு ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் காபித் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. பால் மற்றும் காபி ஃபேஸ் பேக்
* இதற்கு ஒரு பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் காபித் தூளை எடுத்து, அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
5. கற்றாழை மற்றும் காபி மாஸ்க்
* இதற்கு ஒரு பௌலில் காபித் தூளை எடுத்து, கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
