Latest Updates
-
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
ஆகஸ்ட் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது!
Sun Transit In Leo In August 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த ஆகஸ்ட் மாதத்தில் சூரியன் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சிம்ம ராசியின் அதிபதி சூரியன்.

சொந்த ராசிக்கு சூரியன் செல்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே ஏதாவது ஒரு வகையில் காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம்.
அதுவும் 6 ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இதன் விளைவாக தொழிலில் நல்ல முன்னேற்றம் மற்றும் நிதி நிலையில் உயர்வு போன்றவற்றை காணவுள்ளனர். இப்போது ஆகஸ்ட் மாதத்தில் சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் ஆகஸ்ட் மாதமானது இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் வெற்றிகள் குவியும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சில நல்ல செய்திகரளப் பெறுவீர்கள். வசதிகள் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அரசு வேலைகளில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வசதிகள் அதிகரிக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் செல்வாக்கு மிக்கவரின் நட்பைப் பெறுவார்கள். இம்மாதத்தில் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பிடித்த இடங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மங்களகரமானதாக இருக்கும். பண விஷயங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புக்கள் உள்ளன.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எந்த வேலையை செய்தாலும் அதில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட நாள் கனவு இம்மாதத்தில் நிறைவேறும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இம்மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் ஆகஸ்ட் மாதமானது தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். மன அழுத்தம் குறையும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். புதிதாக ஏதாவது தொடங்க நினைத்தால், இக்காலம் அதற்கு உகந்ததாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



