Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி
பொதுவாக கிழங்குகளில் நிறைய சத்துக்கள் இருக்கும். அத்தகைய கிழங்குகளை அக்காலத்தில் உள்ள மக்கள் அதிகம் சாப்பிடுவார்கள். அதனால் தான் அவர்கள் மிகவும் வலுவோடும், ஆரோக்கியமானவர்களாகவும் இருக்கின்றனர். எனவே தான் வீட்டில் உள்ள பெரியோர்கள் அடிக்கடி ஏதேனும் ஒரு கிழங்கை வாங்கி வந்து சமைக்க சொல்வார்கள். ஏனெனில் கிழங்குகளில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். ஆனால் அவற்றில் ஒன்றான மரவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்துடன், கார்போஹைட்ரேட்டும் அதிகம் நிறைந்துள்ளது. இந்த கிழங்கு கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவுப் பொருள்.
இதுவரை இந்த கிழங்கை வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவோம். ஆனால் அத்தகைய கிழங்கை வேக வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை கேரளா ஸ்டைலில் செய்து சாப்பிட்டால், மரவள்ளிக்கிழங்கு பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த முறையில் செய்யும் மரவள்ளிக்கிழங்கை எந்நேரமும் சாப்பிடலாம்.
சரி, இப்போது அந்த மரவள்ளிக்கிழங்கை கேரளா ஸ்டைலில் எப்படி செய்வதென்று படிப்படியாக கொடுத்துள்ளோம். அதை பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 1 கிலோ
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
பச்சை மிளகாய் - 2-3
பூண்டு - 5 பல்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:

படி: 1
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மரவள்ளிக்கிழங்கை போட்டு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

படி: 2
வேக வைத்த மரவள்ளிக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

படி: 3
பின்னர் பூண்டு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் மற்றும் மஞ்சள் தூளை மட்டும் தனியாக அரைப்பதற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

படி: 4
பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

படி: 5
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு தாளிக்க வேண்டும்.

படி: 6
அத்துடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

படி: 7
பின் மசித்து வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.

படி: 8
அதோடு அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் வேண்டுமெனில் உப்பு சேர்க்க வேண்டும்.

படி: 9
அனைத்தையும் சேர்த்த பின், அதனை 5 நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.

படி: 10
இப்போது சுவையான கேரளா ஸ்டைல் மரவள்ளிக்கிழங்கு ரெசிபி ரெடி!!!



Click it and Unblock the Notifications
