Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
பச்சை பட்டாணி மற்றும் தக்காளி சப்ஜி
மார்கெட் சென்றால் பட்டாணி விலை மலிவில் கிடைக்கிறதா? அப்படியானால் தவறாமல் அதை வாங்கி வாருங்கள். ஏனெனில் அந்தந்த சீசனில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் அப்போதே வாங்கி சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்களை எளிதில் பெற முடியும். அந்த வகையில் பட்டாணியில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன.
எனவே பட்டாணியைக் கொண்டு பலவாறான ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள். இங்கு பட்டாணி மற்றும் தக்காளி கொண்டு செய்யக்கூடிய ஒரு சப்ஜி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். மேலும் இது பேச்சுலர் ரெசிபியும் கூட.

தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி - 1 கப்
தக்காளி - 4 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3-4 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, பின் தக்காளி சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு அதில் பச்சை மிளகாய் மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தீயை குறைவில் வைத்து 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.
தக்காளியானது நன்கு வதங்கிவிட்டால், பின் அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கி விட்டால், பச்சை பட்டாணி மற்றும் தக்காளி சப்ஜி ரெடி!!!
இதனை சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications
