Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
மாங்காய் சட்னி
மாங்காய் சீசன் என்பதால் மாங்காய் விலை குறைவில் கிடைக்கும். அப்படி விலை குறைவில் கிடைக்கும் மாங்காயைக் கொண்டு குழம்பு, சாம்பார் என்று மட்டும் செய்யாமல், அதை சற்று வித்தியாசமாக சட்னி செய்து சாப்பிடுங்கள். இப்படி மாங்காய் கொண்டு செய்யப்படும் சட்னியானது இனிப்பு, புளிப்பு என்ற பல சுவைகள் கலந்து, அருமையாக இருக்கும்.
குறிப்பாக மாங்காய் சட்னி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இங்கு அந்த மாங்காய் சட்னியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
மாங்காய் - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 சிட்டிகை
சீரகம் - 1 சிட்டிகை
கடுகு - 1 சிட்கை
பிரியாணி இலை - 1
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 12 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்
செய்முறை:
முதலில் மாங்காயின் தோலை நீக்கியோ அல்லது நீக்காமலோ துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, வெந்தயம், சீரகம் மற்றும் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் மாங்காய் துண்டுகளை போட்டு கிளறி, உப்பு, சர்க்கரை, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறி, தண்ணீர் ஊற்றி கிளறி, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கினால், மாங்காய் சட்னி ரெடி!!!



Click it and Unblock the Notifications
