Latest Updates
-
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
எளிதான பாகற்காய் கிரேவி செய்முறை !
தமிழ்நாட்டு ஸ்டைலில் க்ரேவி செய்வது குறித்தான எக்ஸ்க்ளூசிவ் ரெசிபி
தேவையான பொருட்கள்:
பாகற்காய்: 350 கிராம்
கொத்தமல்லி விதை: 4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு: 4 தேக்கரண்டி
தேங்காய்: 1
மிளகாய்: 10
மிளகு: 1 தேக்கரண்டி
அரிசி மாவு: 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு: 2 மேஜைக்கரண்டி
பெருங்காயம்: சிறு துண்டு
மஞ்சள் பொடி: 3 தேக்கரண்டி
வெல்லம்: அரை அச்சு
எண்ணெய்: 2 மேஜைக்கரண்டி
புளி: கைப்பிடி அளவு
கறிவேப்பிலை, உப்பு, கடுகு: தேவையான அளவு
செய்முறை:
புளியை நன்றாக கரைத்து எடுத்துக்கொள்ளவும். பாகற்காயை நறுக்கி கழுவிக் கொள்ளவும். அதனுடன் 2 கரண்டி புளிக் கரைசலைச்சேர்த்து, கொஞ்சம் நீர் விட்டு, வெல்லம், மஞ்சள் பொடி, உப்பு ஆகியவறைைக் கலந்து சட்டியில் வேக வைக்கவும்.
துவரம் பருப்பையும், கொஞ்சம் கடலைப் பருப்பையும் தனியாக வேக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, மிளகு,கடலைப்பருப்பு, கொத்துமல்லி விதை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும். பின்பு அதனுடன்பெருங்காயத்தையும் பொரித்துக் கொண்டு, எல்லாவற்றையும் மிக்ஸியில் வைத்து அரைக்கவும்.
பாகற்காய் வெந்ததும் மீதமுள்ள புளிக்கரைசலையும் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், அரைத்து வைத்துள்ள விழுதைப்போட்டுக் கலக்கி, அதில் வேக வைத்த பருப்புகளைக் கொட்டவும்.
அதனுடன் மிளகாய், கடுகு ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து, மாவைக் கரைத்து ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்புகறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு இறக்கி வைத்தால் பாகற்காய் குழம்பு பரிமாறுவதற்குத் தயார்.



Click it and Unblock the Notifications
