Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
கத்திரிக்காய் வறுவல்
கோடைக்காலத்தில் கத்திரிக்காய் அதிகம் கிடைக்கும். பொதுவாக கத்திரிக்காயை சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். ஆனால் அதையே எத்தனை முறை தான் செய்து சாப்பிடுவீர்கள். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஒரு அருமையான கத்திரிக்காய் ரெசிபியைக் கொடுத்துள்ளது.
அந்த ரெசிபி மிகவும் ஈஸியானது. 5 நிமிடங்களில் தயார் செய்யக்கூடியது. அது தான் கத்திரிக்காய் ப்ரை. சரி, இப்போது அந்த கத்திரிக்காய் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 1
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை - பாதி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கத்திரிக்காயை வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு ஆகியவற்றை கத்திரிக்காயுடன் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பின் பிரட்டி வைத்துள்ள கத்திரிக்காய் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக வறுத்து எடுத்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதன் மேல் எலுமிச்சை சாற்றினை ஊற்றினால், சுவையான கத்திரிக்காய் வறுவல் ரெடி!!!
Image Courtesy: delightdishes



Click it and Unblock the Notifications