Latest Updates
-
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும்
வெஜிடேபிள் மயோனைஸ் சாண்ட்விச் ரெசிபி
மாலையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளின் பசியை ஆரோக்கியமான உணவுப் பொருட்களின் மூலம் சரிசெய்ய வேண்டுமானால், வெஜிடேபிள் மயோனைஸ் சாண்ட்விச் ரெசிபியை செய்து கொடுங்கள். இந்த ரெசிபியானது மாலையில் மட்டுமின்றி, காலையிலும் செய்யக்கூடியது.
குறிப்பாக வேலைக்கு செல்வோர் காலையில் இதை முயற்சி செய்து பார்க்கலாம். இப்போது அந்த வெஜிடேபிள் மயோனைஸ் சாண்ட்விச் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் - 10
மயோனைஸ் - 1/2 கப்
செலரி - 1 கப் (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (துருவியது)
லெட்யூஸ் இலைகள் - 5
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
டபாஸ்கோ சாஸ்/சில்லி சாஸ் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் செலரி, குடைமிளகாய், கேரட், உப்பு, மிளகு தூள், டபாஸ்கோ/சில்லி சாஸ் மற்றும் மயோனைஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் பிரட் துண்டுகளின் பக்கவாட்டில் உள்ள ப்ரௌன் நிறத்தை அகற்றிவிட வேண்டும்.
பின் ஒரு பிரட் துண்டின் மீது, ஒரு லெட்யூஸ் இலையை வைத்து, அதன் மேல் கலந்து வைத்துள்ள மயோனைஸ் கலவையை பரப்பி, அடுத்து அதன் மேல் மற்றொரு பிரட் துண்டை வைத்து மூட வேண்டும். இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும்.
இப்போது உங்கள் வெஜிடேபிள் மயோனைஸ் சாண்ட்விச் ரெசிபி ரெடி!!!



Click it and Unblock the Notifications
