Latest Updates
-
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க..
எளிமையான குடைமிளகாய் புர்ஜி
குடைமிளகாயில் எண்ணற்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், இதனை உணவில் அதிகம் சேர்த்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் இதனை முட்டை புர்ஜி போன்று, குடைமிளகாய் புர்ஜி கூட செய்யலாம். இது மிகவும் எளிமையான ரெசிபி. குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவாறான சுவையில் இருக்கும். பேச்சுலர்கள் கூட செய்யலாம்.
சரி, இப்போது அந்த சூப்பரான குடைமிளகாய் புர்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
குடைமிளகாய் - 2
வெங்காயம் - 1
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு நறுக்கிய குடைமிளகாய், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து நன்கு வதக்க வேண்டும்.
பின் ஒரு பௌலில் கடலை மாவைப் போட்டு, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து அந்த கடலை மாவை வாணலியில் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறி, இறக்கி விட வேண்டும்.
இப்போது சூப்பரான குடைமிளகாய் புர்ஜி ரெடி!!!



Click it and Unblock the Notifications
