Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஈஸ்டர் உணவு - 'விவிக்காய்'
ஈஸ்டர் பண்டிகையையொட்டி நெல்லை மாவட்டத்தில் செய்யப்படும் சிறப்பு உணவு விவிக்காய். அதை செய்யும் முறை குறித்துப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - அரை கிலோ
சர்க்கரை - 350 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
தேங்காய் உடைத்த தண்ணீர் - 2 டம்பளர்
மஞ்சள் வாழைப்பழம் (கதலி) - 5 சிறியது
முந்திரி - 100 கிராம்
கிஸ்மிஸ் பழம் - 100 கிராம்
பூ, ஏலக்காய் தூள், பேக்கிங் சோடா - தேவையான அளவு
செய்முறை:
நன்கு ஊரிய பச்சரிசியை மினவிசிறிக் காற்றில் உலர்த்தி (வீட்டினுள்), மாவாக அரைத்துக் கொள்ளவும். மாவை சலித்து எடுத்துக் குருணையில், 200 கிராம் எடுத்து போதுமான அளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து குருணையைப் போட்டு கட்டி விழாமல் கிளறி, கஞ்சி போல ஆனதும், இறக்கி ஆற வைக்கவும்.
வாழைப்பழங்களை மிக்சியில் கூழாக்கி பின்பு ஆறிய கஞ்சி மாவில், அரிசி மாவு, தேங்காய்த் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து உப்பு சேர்த்து, பிசைந்து, இரவில் புளிக்க வைக்கவும். தேங்காய்த் தண்ணீருக்குப் பதில், ஈஸ்ட் அல்லது மோர் ஊற்றியும் புளிக்க வைக்கலாம். மாவை சிறிது கெட்டியாக பிசைந்து வைக்க வேண்டும்.
அடுத்த நாள் காலையில் புளித்துப் பொங்கியிருக்கும் மாவுடன் தேங்காய்ப் பூ, சர்க்கரை, ஏலக்காய் தூள், பேக்கிங் சோடா, உடைத்த முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் மாவு நன்கு தளர்ந்திருக்கும். பின் இட்லித் தட்டில், எண்ணெய் தடவி இட்லி போல ஊற்றி வேக விடவும். நடுவில் வெடித்து வந்தால், வெந்த பக்குவம் சரி.
புளிப்பும், இனிப்புமாக செய்யப்படும் இந்த விவிக்காய், ஈஸ்டர் விழாக்கால சிறப்பு சிற்றுண்டியாகும். காலை சிற்றுண்டியாக, குறிப்பாக நெல்லை மாவட்ட மக்கள், ஈஸ்டர் அன்று செய்து உண்பார்கள்.
இதனை சிக்கன் குழம்புடன் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்.
- ரோஸ்லின் தாமஸ்



Click it and Unblock the Notifications
