Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
தக்காளி தால்

தேவையான பொருட்கள்:
மைசூர் பருப்பு - 1 கப்
தக்காளி - 5 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மைசூர் பருப்பை கழுவி போட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை கரண்டி வைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி போட்டு நன்கு வதக்கி, தக்காளியானது நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் தூள் சேர்த்து ஒரு முறை பிரட்டி, பருப்பு மற்றும் உப்பை இத்துடன் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான தக்காளி தால் ரெடி!!! இதன்மேல் கொத்தமல்லியை தூவி, சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
