Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கறிவேப்பிலை இட்லி பொடி
பொதுவாக காலை வேளையில் அவசர அவசரமாக தோசை, இட்லி செய்துவிடுவோம். ஆனால் அதற்கு சட்னி, சாம்பார் என எது செய்வதென்று பலர் தினமும் யோசனையில் மூழ்குவார்கள். அத்தகயைவர்களுக்காக எளிமையான ஒரு ரெசிபியைக் கீழே கொடுத்துள்ளோம்.
அது வேறொன்றும் இல்லை, இட்லி பொடி தான், இட்லிப் பொடியில் பல உள்ளன. இப்போது அதில் கறிவேப்பிலை இட்லி பொடியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதனைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
வர மிளகாய் - 7
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலையைப் போட்டு, 2-3 நிமிடம் மொறுமொறுவென வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்து, குளிர வைக்க வேண்டும்.
பின் அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய் ஆகியவற்றைப் போட்டு, தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக வறுத்தப் பின் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து, நன்கு குளிர வைக்கவும்.
அனைத்துப் பொருட்களும் நன்கு குளிர்ந்ததும், மிக்ஸியில் முதலில் கறிவேப்பிலையைப் போட்டு ஓரளவு அரைத்து, பின் அதில் வறுத்து வைத்துள்ள பருப்புக்கள் மற்றும் உப்பு சேர்த்து பொடி செய்து கொண்டால், சுவையான கறிவேப்பிலை இட்லி பொடி ரெடி!!! இதனை இட்லி, தோசை மற்றும் சாதத்தில் சேர்த்தும் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
