Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
மைதா பக்கோடா
மாலை நேரங்களில் பக்கோடா சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். அதிலும் சற்று காரமாக, மைதா மாவுடன், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து செய்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு அளவே இல்லை. மேலும் இந்த பக்கோடாவை டீ, காப்பி குடிக்கும் போது, செய்து வீட்டில் உள்ளோருக்கு கொடுத்தால், அதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
இப்போது அந்த மைதா பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

மைதா - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
கடலை மாவு - 1/2 கப்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மைதா மாவைப் போட்டு, ஆவியில் சிறிது நேரம் வேக வைத்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணெய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பக்கோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக பக்கோடா போன்று பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது மொறுமொறுவென சூடான மைதா பக்கோடா ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications