Latest Updates
-
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
கொத்தமல்லி எலுமிச்சை சாதம்
காலையில் மிகவும் எளிமையான முறையில் காலை உணவு செய்ய நினைத்தால், கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாதத்தை முயற்சி செய்யுங்கள். இது மிகவும் ஈஸியான ரெசிபி மட்டுமின்றி, ஆரோக்கியமான ரெசிபியும் கூட. மேலும் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
பேச்சுலர்கள் கூட இந்த ரெசிபியை முயற்சி செய்யலாம். சரி, இப்போது அந்த கொத்தமல்லி எலுமிச்சை சாதத்தை எப்படி செய்வதென்று பார்போமா!!!

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 3-4 பற்கள் (நறுக்கியது)
வெஜிடேபிள் ஸ்டாக் - 2 கப்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் அரிசி நீரில் 15-20 நிமிடம் ஊற வைத்து, நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு கழுவி வைத்துள்ள அரிசியைப் போட்டு சிறிது நேரம் கிளறி, பின் வெஜிடேபிள் ஸ்டாக் ஊற்றி, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, தட்டு கொண்டு மூடி, தீயை குறைவில் வைத்து, சாதத்தை வேக வைக்க வேண்டும்.
சாதமானது வெந்ததும், அதில் கொத்தமல்லி மற்றும் மீதமுள்ள எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி இறக்கினால், சூப்பரான கொத்தமல்லி எலுமிச்சை சாதம் ரெடி!!!



Click it and Unblock the Notifications
