Latest Updates
-
அக்டோபர் இறுதியில் உதயமாகும் சுக்கிரன்: இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை தீர்ந்து, வங்கி இருப்பு அதிகரிக்கும்.. -
Vastu Tips: வாஸ்துப்படி ஃப்ரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல பண இழப்பு அதிகரிக்கும்.. -
அக்டோபர் 24-ல் புதன் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 4 ராசிகளின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் மாத தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சரவணபவன் காலிஃபிளவர் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களுக்கு சிறந்த ரோல்மாடலாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
கிரகப்பிரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்.. -
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க
சில்லி தோசை
பொதுவாக தோசை என்றாலே குழந்தைகளுக்கு பிடிக்கும். அதிலும் தோசை மொறுமொறுவென்று இருந்தால், அவர்களது வயிற்றில் அதிக அளவில் தோசை செல்லும். இதுவரை குழந்தைகளுக்கு சாதாரணமாகத் தான் தோசை சுட்டுக் கொடுத்திருப்போம். ஆனால் காய்கறி சாப்பிட விருப்பமில்லாத குழந்தைகளுக்கு, தோசையை வைத்தே, வித்தியாசமான முறையில் மசாலா தோசை போன்று சில்லி தோசை செய்து கொடுக்கலாம்.
அதிலும் சில்லி தோசையில் குடைமிளகாய் சேர்த்து செய்வதால் தான், இதற்கு சில்லி தோசை என்று பெயர் வந்தது. அதுமட்டுமின்றி இதில் சிறிது பச்சை மிளகாய் சேர்ப்பதால், குழந்தைகளுக்கு ஏற்றவாறு பச்சை மிளகாய் சேர்த்து செய்வது நல்லது. சரி, இப்போது அந்த சில்லி தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தோசை மாவுடன் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து, நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள தக்காளி, உப்பு மற்றும் சோயா சாஸ் சேர்த்து 1 நிமிடம் கிளறி, அதனை தோசை மாவுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தேய்த்து, கலந்து வைத்துள்ள தோசை மாவை வைத்து, தோசை ஊற்றி, எண்ணெய் சேர்த்து, மொறுமொறுவென்று சுட்டு, குழந்தைகளுக்கு பரிமாறவும்.
இப்போது சுவையான சில்லி தோசை ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
