Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
சில்லி சீஸ் சாண்ட்விச்
சாண்ட்விச்சில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. மேலும் சாண்ட்விச்சுகள் அனைத்தும் விருப்பத்திற்கேற்றவையே. அத்தகையவற்றில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது சீஸ் சாண்ட்விச் தான். அந்த சீஸ் சாண்ட்விச்சில் எந்த ஒரு காரமும் இல்லாததால், அத்துடன் குடைமிளகாய், வெங்காயம் போன்றவற்றை சேர்த்து செய்தால், அது தான் சில்லி சீஸ் சாண்ட்விச்.
இப்போது அந்த சில்லி சீஸ் சாண்ட்விச்சின் செய்முறையைப் பார்ப்போமா!!!

பிரட் - 1 பாக்கெட்
வெண்ணெய் - தேவையான அளவு
குடைமிளகாய் - 2
வெங்காயம் - 2
புதினா சட்னி - 2 டேபிள் ஸ்பூன்
சீஸ் - 3 கட்டிகள் (துருவியது)
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குடைமிளகாய், பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு பௌலில் ஒன்றாக போட்டு, அதில் புதினா சட்னி, உப்பு மற்றும் துருவிய சீஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பிரட் துண்டின் மேல் வெண்ணெய் தடவி, அதன் மேல் சிறிது கலந்து வைத்துள்ள கலவையை வைத்து, மீண்டும் அதன் மேல் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரட் துண்டை வைத்து மூடி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அது சூடானது, அதில் பிரட் துண்டுகளை ஒரு 5 நிமிடம் முன்னும் பின்னும் டோஸ்ட் செய்ய வேண்டும்.
இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும்.
இப்போது சுவையான சில்லி சீஸ் சாண்ட்விச் ரெடி!!!



Click it and Unblock the Notifications
