Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
காலிஃப்ளவர் பட்டாணி குருமா
காலிஃப்ளவர் பட்டாணி குருமாவானது 1/2 மணிநேரத்தில் செய்து முடிக்கக்கூடியவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இந்த குருமாவை சாதம், சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு காரம் அளவாக இருக்கும்.
உங்களுக்கு காலிஃப்ளவர் பட்டாணி குருமவை எப்படி சிம்பிளாக செய்து முடிப்பதென்று கொடுக்கப்பட்டுள்ளது, அதைப் படித்து பார்த்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1
பச்சை பட்டாணி - 1/4 கப்
வெங்காயம் - 1/2 (நீளமாக நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தேங்காய் - 1/4 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
முந்திரி - 5
வெங்காயம் - 1
தக்காளி - 1
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்
பச்சை மிளகாய் - 2
பட்டை - 1/2 இன்ச்
கிராம்பு - 1
செய்முறை:
முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் காலிஃப்ளவரை சுத்தம் செய்து, அதனை சுடுநீரில் போட்டு ஒருமுறை அலசி, பின் அதனை குக்கரில் போட்டு, அத்துடன் பச்சை பட்டாணி, உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கி கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் அரைத்து அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் வேக வைத்துள்ள காலிஃப்ளவர் மற்றும் பட்டாணியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், காலிஃப்ளவர் பட்டாணி குருமா ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
