Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
முட்டைகோஸ் கட்லெட்
மாலை வேளையில் ஏதேனும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி உள்ளது. கட்லெட்டில் நிறைய வகைகள் உள்ளன. ஆனால் முட்டைகோஸ் கட்லெட்டை கேள்விபட்டிருக்கிறீர்களா?
இல்லையெனில், அந்த முட்டைகோஸ் கட்லெட்டை ட்ரை செய்து பாருங்கள். உங்களுக்காக, முட்டைகோஸ் கட்லெட்டை எப்படி செய்வதென்று எளிமையான செய்முறையில் கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பாருங்களேன்...
தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ் - 1 கப் (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
பிரட் தூள் - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்கு கொள்ள வேண்டும்.
பின்பு அதனை சிறு சிறு உருண்டைகளாக்கி, கட்லெட் போன்று தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு பௌலில் மைதாவை போட்டு, 1/2 கப் நீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
பின் தட்டி வைத்துள்ள கலவையை, மைதா மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, ஒரு தட்டில் வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, அந்த கட்லெட் துண்டுகளை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்தையும் பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான முட்டைகோஸ் கட்லெட் ரெடி!!!



Click it and Unblock the Notifications

