Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
கம்பு ஆலு சப்பாத்தி
விடுமுறை நாட்கள் வந்தாலே குஷி தான். ஏனெனில் பொறுமையாக தூங்கி எழுந்து, விதவிதமாக சமைத்து சாப்பிடலாம். அதிலும் புதிய ரெசிபிக்களை அப்போது முயற்சி செய்வது இன்னும் சிறந்ததாக இருக்கும். அந்த வகையில், ஒருவித்தியாசமான டிபன் ரெசிபியை முயற்சி செய்ய நினைத்தால், கம்பு ஆலு சப்பாத்தியை முயற்சி செய்து பாருங்கள்.
இது செய்வதற்கு எளிமையாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இப்போது அந்த கம்பு ஆலு சப்பாத்தி/கம்பு ஆலு ரொட்டியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கம்பு மாவு - 2 கப்
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கம்பு மாவு, உருளைக்கிழங்கு, வெங்காயம், தேங்காய், பச்சை மிளகாய், மாங்காய் தூள், உப்பு ஆகியவற்றை போட்டு, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், ஒவ்வொரு சப்பாத்திகளையும் போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது சூப்பரான கம்பு ஆலு ரொட்டி ரெடி!!! இதனை அப்படியே சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications