Latest Updates
-
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும்
10 சுவையான மற்றும் எளிமையான கலவை சாதங்கள்!!!
பொதுவாக திங்கட்கிழமை வந்தாலே, அதிகாலையில் எழுந்து சமைப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருக்கும். என்ன சமைப்பதென்றே தெரியாது. அதிலும் குழந்தைகள் வீட்டில் இருந்தால், அவர்கள் பள்ளியில் மதிய வேளையில் சாப்பிட ஏற்றவாறு சமைக்க வேண்டும். எப்போதும் குழந்தைகளுக்கு இட்லி, தோசை என்று செய்து கொடுக்க முடியாது. அவ்வாறு செய்து கொடுத்தாலும், குழந்தைகள் சாப்பிடாமல் மாலையில் அப்படியே வீட்டிற்கு கொண்டு வருவார்கள்.
ஆகவே காலையில் இட்லி, தோசை என்று தினமும் செய்யாமல், அவ்வப்போது கலவை சாதம் எனப்படும் வெரைட்டி ரைஸ்களையும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், அது மதிய வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்றவாறும், சுவையுடனும் இருக்கும். எனவே அத்தகையவர்களுக்காக, இங்கு ஒருசில எளிமையான முறையில் செய்யக்கூடிய கலவை சாத பட்டியலையும், அதன் செய்முறையையும் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, காலையில் செய்து அசத்துங்கள்.

தக்காளி பூண்டு சாதம்
தக்காளி பூண்டு சாதம் ஒரு நல்ல காரசாரமான உணவு. மேலும் காலை வேளையில் எளிதில் செய்யக்கூடிய ஒரு எளிமையான கலவை சாதம். இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். சொல்லப்போனால் இது ஒரு பிரியாணி போன்று இருக்கும்.

பருப்பு சாதம்
காலையில் சீக்கிரமாகவும், ஆரோக்கியமானதாகவும் ஒரு கலவை சாதம் செய்ய வேண்டுமெனில், அதற்கு பருப்பு சாதம் தான் சிறந்தது. இது மிகவும் சுவையுடன் இருக்கும்.

அவல் தேங்காய் சாதம்
அவல் தேங்காய் சாதம் சற்று வித்தியாசமான ரெசிபியாக இருப்பதோடு, அதன் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

பீட்ரூட் சாதம்
காய்கறி சாப்பிடாத குழந்தைகளை, காய்கறிகளை சாப்பிட வைக்கும் சிறந்த முறையென்றால், அது கலவை சாதம் மூலம் தான். அதில் பீட்ரூட் சாதம் மிகவும் அருமையாக இருக்கும்.

மலபார் ஸ்டைல்: நெய் சாதம்
சில குழந்தைகள் காரம் சாப்பிடமாட்டார்கள். அவர்களுக்கு சிறந்த உணவு என்றால், அது நெய் சாதம் தான். அந்த நெய் சாதத்தில் மலபார் ஸ்டைல் நெய் சாதம் சற்று வித்தியாசமாக இருக்கும்.

பூண்டு சாதம்
பூண்டு உடலுக்கு மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். பூண்டு இதயத்திற்கு மிகவும் நல்லது. இத்தகைய பூண்டு கொண்டும் அருமையான முறையில் ஒரு கலவை சாதம் செய்யலாம்.

மாங்காய் சாதம்
கோடையில் மாங்காய் அதிகம் கிடைக்கும். அத்தகைய மாங்காயை அப்படியே சாப்பிட பிடிக்காவிட்டால், அதனை கொண்டு கலவை சாதம் செய்து சாப்பிடலாம்.

இட்லி பொடி சாதம்
இட்லிப் பொடியை இட்லிக்கு மட்டும் தான் தொட்டுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. அதனை சாதத்துடனும் சாப்பிடலாம். இந்த ரெசிபியை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

பைனாப்பிள் சாதம்
அன்னாசிப் பழத்தைக் கொண்டு செய்யப்படும் ஒரு வகையான வித்தியாசமான ஒரு கலவை சாதம் தான் பைனாப்பிள் சாதம். இந்த ரெசிபியையும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தக்காளி சாதம்
அனைவருக்குமே தக்காளி சாதம் என்றால் பிடிக்கும். தக்காளி சாதத்தை பலரும் பலவாறு சமைப்பார்கள். அந்த வகையில், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தக்காளி சாதத்தின் செய்முறை மிகவும் எளிமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications