Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பச்சடியுடன் கொண்டாடுங்கள் தெலுங்கு வருடப்பிறப்பை
திங்கட்கிழமை யுகாதிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடுவது போலவே ஆந்திர, கர்நாடக மக்களும் யுகாதி எனப்படும் புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.
அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ணக் கோலமிட்டு, எண்ணை தேய்த்துக்குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபடும் மக்கள்
வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் விதமாக யுகாதி பச்சடி என்ற ஒரு உணவை தயாரிப்பார்கள்.
வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவார்கள்.
இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், தேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது. யுகாதி பச்சடி தயாரித்து இறைவனுக்கு படையல் இட்டு சூரியனை வழிபடுவார்கள். மாலையில் வாசலில் விளக்கேற்றிய பின்னர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யவர்.
யுகாதி பச்சடி
தேவையான பொருட்கள்:
மாங்காய் (தோலோடு மெல்லிதாக சீவியது), வெல்லம்- கால் கப்.
புளிக்கரைசல் /பேஸ்ட், உலர்ந்த வேப்பம்பூ - 1 மேஜைக்கரண்டி அளவு
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி + தேவையான அளவு உப்பு. எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டு திக் பேஸ்ட் மாதிரி கலந்துக்கொண்டால், பச்சடி ரெடி!
அனைவருக்கும் யுகாதி வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications