Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
வீட்டிலேயே வெஜ் மோமோஸ் செய்வது எப்படி?
Veg Momos: உங்கள் வீட்டில் உள்ளோர் மோமோஸை விரும்பி சாப்பிடுவார்களா? இதுவரை நீங்கள் மோமோஸை கடைகளில் தான் வாங்கி சுவைத்திருக்கிறீர்களா? அப்படியானால் இன்று அந்த மோமோஸை வீட்டிலேயே செய்யுங்கள். அதுவும் நீங்கள் முதன்முதலாக வீட்டில் மோமோஸ் செய்பவரானால், வெஜ் மோமோஸை முதலில் செய்து பாருங்கள்.
வெஜ் மோமோஸ் செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது ஆரோக்கியமானதும் கூட. வெஜ் மோமோஸில் உங்களுக்கு பிடித்த எந்த காய்கறிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு வெஜ் மோமோஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜ் மோமோஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 2 கப்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெதுவெதுப்பான தண்ணீர் - தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
* முட்டைக்கோஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 3/4 கப் (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1-2 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் எண்ணெய்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக வெதுவெதுப்பான
நீரை ஊற்றி மென்மையாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து, மூடி வைத்து,
சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கிய பின்,
வெங்காயத்தைப் போட்டு, நிறம் லேசாக மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கேரட்டை சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து
அதில் முட்டைக்கோஸை சேர்த்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் சோயா சாஸ், மிளகுத் தூள் சேர்த்து கிளறி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* அடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து 2-3 நிமிடம் நன்கு பிசைய
வேண்டும். பின் ஒரு எலுமிச்சை அளவிலான மாவை எடுத்து உருட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதை பூரிக் கட்டையை பயன்படுத்தி தட்டையாக தேய்த்து, அதன் நடுவே
ஒரு டேபிள் ஸ்பூன் தயாரித்து வைத்துள்ள காய்கறி கலவையை வைத்து, மோமோஸ்
வடிவில் மடித்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும்
மோமோஸ்களாக செய்து, இட்லி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் இட்லி பாத்திரத்தில் சிறிது நீரை ஊற்றி அடுப்பில் வைத்து,
நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், மோமோஸ் வைத்துள்ள இட்லி தட்டை
பாத்திரத்தினுள் வைத்து மூடி, 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால்,
சுவையான வெஜ் மோமோஸ் தயார்.
Image Courtesy: sailusfood



Click it and Unblock the Notifications









