சப்பாத்திக்கு இந்த வெஜிடேபிள் வெள்ளை குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க!

Posted By:

Vegetable Vellai Kurma In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி அடிக்கடி செய்வீர்களா? அதற்கு எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் தான் சைடு டிஷ் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் காய்கறிகளை அதிகம் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் காய்கறிகளை சேர்த்து வெள்ளை குருமா செய்யுங்கள்.

Veg Kurma How To Make Vegetable Vellai Kurma For Chapati

இந்த வெஜிடேபிள் வெள்ளை குருமா செய்வதற்கு சற்று சிம்பிளாக ஈஸியாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். அதே வேளையில் சத்தானதும் கூட. முக்கியமாக பிள்ளைகளை காய்கறிகளை சாப்பிட வைக்க நினைத்தால், இப்படி குருமா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் வழக்கத்தை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த வெஜிடேபிள் வெள்ளை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் வெள்ளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 1/2 கப்
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 5 பல்
* பச்சை மிளகாய் - 3-4
* முந்திரி - 5-6
* கசகசா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 3
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் - 2
* கல்பாசி - சிறிது
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 8 (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* அரைத்த தேங்காய் விழுது
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், முந்திரி, கசகசா ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், கல்பாசி ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து கலந்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான வெஜிடேபிள் வெள்ளை குருமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, November 9, 2026, 23:00 [IST]
Desktop Bottom Promotion