Latest Updates
-
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
Vazhakkai Kootu Recipe in Tamil: ஆடி மாதத்தில் உள்ள பல சிறப்பு வாய்ந்த நாட்களில் ஆடி அமாவாசை மிகவும் முக்கியமான நாளாகும். ஆடி அமாவாசை அன்று ஸ்பெஷல் உணவு செய்து முன்னோர்களுக்கு படைப்பது தமிழர்களின் பாரம்பரியமாகும். அமாவாசை நாளில் பெரும்பாலான வீடுகளில் செய்யப்படும் முக்கிய உணவு கூட்டு வகைகளாகும். பொதுவாக கூட்டு என்றால் பூசணிக்காய், சுரைக்காய் அல்லது புடலங்காய் போன்றவற்றில்தான் செய்வார்கள், ஆனால் வாழைக்காய் கூட்டு எப்போதாவது சாப்பிட்டு இருக்கிறீர்களா?

வாழைக்காயை பொதுவாக பஜ்ஜி அல்லது பொரியல்தான் செய்வார்கள், ஆனால் செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செய்வது பலரும் முயற்சிக்காததாகும். இந்த ஸ்டைலில் வாழைக்காய் கூட்டு செய்து கொடுத்தால் பிடிக்காத்தவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இந்த வாழைக்காய் கூட்டை செய்வதும் மிகவும் எளிதானதாகும்.
உங்களுக்கு அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அமாவாசை வாழைக்காய் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் நறுக்கிய வாழைக்காய்
- 3 ஸ்பூன் புளிக்கரைசல்
- 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 சிட்டிகை பெருங்காயத் தூள்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- தேவையான அளவு உப்பு
- ½ கப் தண்ணீர்
- 2 ஸ்பூன் தேங்காய்
வறுத்து அரைக்க:
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 2 ஸ்பூன் தனியா
- 3 காய்ந்த மிளகாய்
- 2 ஸ்பூன் தேங்காய்
- அரைக்கத் தேவையான தண்ணீர்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பச்சை, 2 ஸ்பூன் கடலைப்பருப்பு, புளிக்கரைசல், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- இதை குக்கரில் போட்டு 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
ஒரு கடாயில் 1 ஸ்பூன் கடலைப்பருப்பு, 2 ஸ்பூன் மல்லி விதைகள் மற்றும் 3 வர மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- எண்ணெய் சேர்க்காமல் பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பின்னர் இவற்றை மிக்ஸி ஜாருக்கு மாற்றி, அதனுடன் 2 ஸ்பூன் துருவிய தேங்காயைச் சேர்க்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, இதை மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் தேங்காய் சேர்த்து, அது பொன்னிறமாகும் வரை
வறுத்துக்கொள்ளவும்.
இதை தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- கடுகு வெடிக்கத் தொடங்கியதும், வேகவைத்த வாழைக்காய் கலவையை அதில் சேர்க்கவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதையும் உப்பையும் சேர்க்கவும்.
- பொதுவாக இந்தக்கூட்டு கெட்டியாக இருந்தால்தான் நன்றாக இருக்கும்.
- இந்த கலவையை 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- இறுதியாக வறுத்த தேங்காயைச் சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும்.
- அவ்வளவுதான் சுவையான வாழைக்காய் கூட்டு ரெடி.



Click it and Unblock the Notifications
