Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
1 கப் பெரிய வெங்காயம் இருந்தா 10 நிமிடத்தில் இந்த சட்னியை அரைங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்!
Varutha Vengaya Chutney Recipe in Tamil: இன்று இரவு அல்லது நாளை காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை சுட திட்டம் போட்டுருக்கீங்களா? இட்லி, தோசை என்றாலே எப்போதும், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னியைத் தான் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்ப இந்த வறுத்த வெங்காய சட்னியை செய்து பாருங்கள்.
உங்கள் வீட்டில் பெரிய வெங்காயம், புளி மற்றும் வரமிளகாய் போன்ற எளிய பொருட்கள் உள்ளதா? அப்படியானால் இவற்றை வைத்தே 10 நிமிடத்தில் சுவையான சட்னியை செய்யலாம். இந்த சட்னி அவரசமாக சமைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் எளிதாகவும், சுவையாகவும் இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். இட்லி, தோசைக்கு எளிதான மற்றும் சுவையான சட்னி என்றால் அது இதுதான்.

உங்களுக்கு வறுத்த வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வறுத்த வெங்காய சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் நறுக்கிய வெங்காயம்
- 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
- 5 வர மிளகாய்
- ½ ஸ்பூன் எண்ணெய்
- சிறிய நெல்லிக்காய் அளவு புளி
- தேவையான அளவு உப்பு
- ½ ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் சீரகம்
- 1 சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- ஒருகடாயில், ½ ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து, அவை வெடிக்கத் தொடங்கியதும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் வர மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- அனைத்தும் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். இறுதியாக, பெருங்காயத்தைச் சேர்க்கவும். பின் இவற்றை ஒரு தட்டிற்கு மாற்றி, ஆறவிடவும்.
- அதே கடாயில், மீண்டும் ½ தேக்கரண்டி எண்ணெயைச் சூடாக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், புளி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். மிதமான தீயில், வெங்காயம் கண்ணாடி போன்ற பதம் அடையும் வரை வதக்கவும். பின்னர் அதையும் ஆற வைக்கவும்.
- ஒரு மிக்சர் ஜாரில், வறுத்த வர மிளகாய் மற்றும் பருப்புக் கலவையைச் சேர்த்து, மென்மையாகும் வரை அரைக்கவும்.
- பின் வறுத்த வெங்காயத்தைச் சேர்த்து, அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலக்கும் வரை அரைக்கவும். ஜாரின் ஓரங்களில் ஒட்டியிருப்பதை வழித்துவிட்டு, இன்னும் ஓரிரு முறை விட்டுவிட்டு அரைக்கவும்.
- அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- இந்த சட்னியை தாளிக்காமலேயே சாப்பிடலாம், நீங்கள் விருப்பப்பட்டால் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்தும் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
