வரகு அரிசியை இந்த பக்குவத்துல செஞ்சு சாப்பிடுங்க.. சுவையும் அள்ளும்.. உடல் எடையும் கடகடன்னு குறையும்...

Posted By:

Varagu Arisi Sambar Sadam Recipe In Tamil: காலையில் தினமும் ஒரே மாதிரியான டிபனை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் அவ்வப்போது சிறுதானியங்களைக் கொண்டு சமைத்து சாப்பிடுங்கள். அதுவும் சிறுதானியங்களுள் ஒன்றான வரகு அரிசியைக் கொண்டு சாம்பார் சாதம் செய்து சாப்பிடுங்கள்.

இந்த சாம்பார் சாதம் வெறுமனே சாப்பிட நன்றாக இருக்கும். முக்கியமாக வேலைக்கு செய்பவர்கள் இப்படியான ரெசிபிக்களை தெரிந்து வைத்துக் கொண்டால், டக்கென்று சமையலை முடிக்கலாம். அதுவும் இதில் காய்கறிகளும் அதிகம் சேர்ப்பதால், எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தினமும் இந்த சாதத்தை செய்து சாப்பிடுவது நல்லது.

Varagu Arisi Sambar Rice How To Make a Varagu Arisi Sambar Sadam Recipe

உங்களுக்கு வரகு அரிசி சாம்பார் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரகரசி சாம்பார் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வரகரிசி - 1/2 கப்
* பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கியது)
* தக்காளி - 2 (நீளவாக்கில் நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பீன்ஸ் - 5 (சற்று நீளவாக்கில் நறுக்கியது)
* பெரிய கேரட் - 1 (சற்று நீளவாக்கில் நறுக்கியது)
* பெரிய உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
* கத்திரிக்காய் - 3 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 3 1/2 கப்
* புளி - எலுமிச்சை அளவு (1/2 கப் நீரில் ஊற வைத்தது)
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் வரகு அரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து, நீரில் 2 முறை கழுவி விட்டு, பின் நீரை ஊற்றி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தீக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், சாம்பார் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 3 1/2 கப் நீரை ஊற்றி, அத்துடன் புளி நீரை ஊற்றி கிளறி, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்து கழுவி வைத்துள்ள வரகு அரிசியை பருப்புடன் சேர்த்து கிளறி, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் 2 டேப்ள் ஸ்பூன் நெய் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான வரகு அரிசி சாம்பார் சாதம் தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion