Latest Updates
-
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
வரகரிசி கஞ்சியும், முட்டை ஆம்லெட்டும் - எப்படி செய்றது-ன்னு பாத்து இந்த காம்போவை ட்ரை பண்ணி பாருங்க!
Varagarisi Kanji With Egg Omelette REcipe In Tamil: தினமும் காலையில் என்ன சமைப்பது என்று முடிவெடுப்பதே ஒரு பெரிய வேலையாக உள்ளதா? உங்கள் வீட்டில் உள்ளோர் லைட் ஃபுட் கேட்கிறார்களா? அப்படியானால் உடலுக்கு வலு சேர்க்கும்படியான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த வரகரிசியைக் கொண்டு அற்புதமான சுவையில் கஞ்சி செய்யுங்கள்.
இந்த கஞ்சிக்கு வழக்கமாக செய்யும் துவையலை செய்யாமல், ஒருமுறை முட்டை ஆம்லெட் போடுங்கள். இந்த காம்பினேஷன் சற்று வித்தியாசமாக இருந்தாலும், அருமையாக இருக்கும். இந்த வரகரிசி கஞ்சியையும், முட்டை ஆம்லெட்டையும் எப்படி செய்வதென்று கவிதா சமையலறை என்னும் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

உங்களுக்கு இந்த வரகரிசி கஞ்சி மற்றும் முட்டை ஆம்லெட்டின் எளிய செய்முறையை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கஞ்சிக்கு...
* வரகரிசி - 1/2 கப்
* பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 750 மிலி
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 2 சிட்டிகை
* பூண்டு - 5-6 பூண்டு பற்கள்
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* சுடுநீர் - தேவையான அளவு
ஆம்லெட்டிற்கு...
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* பொடித்த மிளகு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* முட்டை - 2
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* ஒரு குக்கரை எடுத்து, அதில் வரகரிசி மற்றும் பாசிப்பருப்பை
சேர்த்து, 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 750 மிலி நீரை ஊற்றி, அத்துடன் சீரகம், வெந்தயம், பூண்டு
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, துருவிய தேங்காயை சேர்த்து கலந்து
குக்கரை மூடி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து 3-4 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியை தூவி,
தேவையான அளவு சுடுநீரை ஊற்றி கலந்து கொண்டால், வரகரிசி கஞ்சி
தயார்.
* அடுத்து சைடு டிஷ் செய்ய ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய
வெங்காயம், பச்சை மிளகாய், பொடித்த மிளகு, சுவைக்கேற்ப உப்பு, சிறிது
கொத்தமல்லி மற்றும் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக, தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும் அதில்
அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி, எண்ணெய் ஊற்றி முன்னும்
பின்னும் வேக வைத்து எடுத்தால், முட்டை ஆம்லெட் தயார்.



Click it and Unblock the Notifications
