Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
பிச்சிக்குது விற்பனை.. ரூ.10,499 க்கு 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்? | Vivo T4 Lite 5G 15 Percent Discount -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
புது ATM ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்.. 100 ரூபாயோ.. 1000 ரூபாயோ.. இதுதான் புது லிமிட்.. 3 முக்கிய மாற்றங்கள்! | New ATM Transactions Rules From April 1 -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
Surprise Plunge in Gold & Silver Prices amid Iran War Tensions: Chennai Rates Drop further -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...!
கல்யாண பந்தி உருளை பட்டை மசாலா ரெசிபி... இதை செஞ்சு பாருங்க... சாம்பார், ரசம் சாதத்துக்கு பட்டாசா இருக்கும்...
Urulai Pattai Masala Recipe: 'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்று கூறுவார்கள், ஆனால் சைடிஷ் இல்லாத உணவும் குப்பையில்தான். மதியம் சாம்பார், ரசத்துக்கு சிம்பிளான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா? அதோடு கொஞ்சம் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் சேர்த்து ஒரு கல்யாண பந்தி ஸ்டைலில் ஒரு அருமையான மசாலா செய்து சாப்பிடுங்கள்.
இந்த உருளை பட்டை மசாலா சாம்பார், ரசம் சாதத்துடன் மட்டுமின்றி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த மசாலா டக்கென்று செய்யக்கூடியவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். குறிப்பாக இந்த மசாலா குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு அட்டகாசமாக இருக்கும். பொரியல் பிடிக்காத குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு உருளை பட்டை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளை பட்டை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 5 உருளைக்கிழங்கு
- தேவையான அளவு தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 4 பூண்டு
- 1/2 டீஸ்பூன் இஞ்சி
- 1 கப் பட்டாணி
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்
- 1 கப் நறுக்கிய தக்காளி
- தேவையான அளவு உப்பு
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- கொத்தமல்லி இலை சிறிதளவு
- 1 கப் தண்ணீர்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- கால் ஸ்பூன் கடுகு
- அரை ஸ்பூன் சீரகம்
செய்முறை:
- முதலில் உருளைக்கிழங்கை தேவையான தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- இஞ்சி மற்றும் பூண்டை இடித்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் கடுகு, பெருஞ்சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும் நறுக்கிய இஞ்சி-பூண்டு மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
-பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும், வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- பின்னர்நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் பட்டாணி சேர்த்து நன்கு கிளறவும்.
- பட்டாணி வேகும் படி மூடி போட்டு சமைக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். மசாலா
கொதித்ததும்
வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- மசாலா உருளைக்கிழங்குடன் நன்கு கலந்தவுடன் கொத்தமல்லி தூவி கிளறினால் சூப்பரான உருளை பட்டை மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications











