Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க..
Urad Dal Sweet Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? அதுவும் ஸ்வீட் கேட்கிறார்களா? அப்போது அவர்களுக்கு ருசியான, அதே சமயம் சத்தான ஒரு ஸ்வீட் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1 கப் உளுத்தம் பருப்பும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தால், அவற்றைக் கொண்டு ஸ்வீட் செய்து கொடுங்கள். இந்த உளுந்து ஸ்வீட் ருசியானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. அதுவும் இந்த ஸ்வீட்டை சூடாகவும் சாப்பிடலாம் அல்லது ஃப்ரீசரில் 2 மணிநேரம் வைத்து எடுத்தும் சாப்பிடலாம்.

உங்களுக்கு இந்த உளுந்து ஸ்வீட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உளுந்து ஸ்வீட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* முந்திரி - 5
* பாதாம் - 5
* ஏலக்காய் - 4
* பால் - 1 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
* வெல்லம் - 2 கப்
* தண்ணீர் - 1 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் உளுத்தம்
பருப்பை சேர்த்து, மிதமான தீயில் வைத்து நல்ல மணம் வந்து
பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் பாசிப்பருப்பை சேர்த்து நல்ல மணம் வரும் வரை
வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் முந்திரி, பாதாம் மற்றும் ஏலக்காயை சேர்த்து நன்கு
வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக
அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 2 கப் பொடித்த வெல்லத்தை எடுத்து, அதில் 1
கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கரைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியில் வெல்ல நீரை வடிகட்டி எடுத்து, அத்துடன்
அரைத்த உளுந்து பொடியை சேர்த்து அடுப்பில் வைத்து, கட்டிகளின்றி நன்கு
கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1 கப் காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி கிளறி, அல்வா
பதத்திற்கு வரும் வரை கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் நெய்யை சேர்த்து நன்கு கிளறி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு ஒரு ட்ரேயில் நெய்யை தடவி, தயாரித்து வைத்துள்ளதை சேர்த்து
சமமாக பரப்பி விட்டு, ஃப்ரிசரில் 2 மணிநேரம் வைத்து எடுத்து,
துண்டுகளாக்கினால், சுவையான உளுந்து ஸ்வீட் தயார்.



Click it and Unblock the Notifications
