Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ?
1 கப் உளுந்து இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. 1 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்..
Ulunthu Omapodi Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட மொறுமொறுவென்று ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பஜ்ஜி மாவு எதுவும் இல்லையா? ஆனால் உங்கள் வீட்டில் உளுத்தம் பருப்பு உள்ளதா? அப்படியானால் அந்த உளுத்தம் பருப்பைக் கொண்டு நன்கு மொறுமொறுவென்று ஓமப்பொடியை செய்து கொடுங்கள்.
இப்படி உளுத்தம் பருப்பு கொண்டு செய்யும் ஓமப்பொடியை ஒருமுறை செய்தால், 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். உங்கள் வீட்டில் உள்ளோர் எந்நேரமும் ஸ்நாக்ஸை நொறுக்குபவராயின், இப்படியான ஓமப்பொடியை செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக இந்த ஓமப்பொடியை செய்வதற்கு மிகவும் சுலபம்.

உங்களுக்கு உளுத்தம் பருப்பு ஓமப்பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஓமப்பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு - 1 கப்
* தண்ணீர் - 3 கப்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* அரிசி மாவு - 4 கப்
* ஓமம் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் குக்கரில் உளுத்தம் பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் 3
கப் நீரை ஊற்றி, பெருங்காயத் தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து,
குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் குளிர வைத்த உளுத்தம் பருப்பை சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த உளுத்தம் பருப்பு மாவை
சேர்த்து, அத்துடன் அரிசி மாவு, ஓமம், மிளகாய் தூள், சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, சிறிது நீரை தெளித்து, மென்மையாக முறுக்கு மாவு
பதத்திற்கு பிசைந்து மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் முறுக்கு உழக்கை எடுத்து, அதில் இடியாப்பம் பிழியும் அச்சை
வைத்து, உழக்கில் எண்ணெய் தடவிக் கொண்டு, பிசைந்து வைத்துள்ள மாவை
சிறிது வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தீயை முழுமையாக குறைத்துவிட்டு,
முறுக்கு அச்சில் உள்ள மாவை எண்ணெயில் நேரடியாக பிழிந்து விட
வேண்டும்.
* பிழிந்ததும் உடனே கரண்டியால் திருப்பி விடாமல், 1 நிமிடம் கழித்து
திருப்பிப் போட்டு, பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான மற்றும்
மொறுமொறுப்பான ஓமப்பொடி தயார்.



Click it and Unblock the Notifications
