இட்லி, தோசைக்கு உளுத்தம் பருப்பு வெச்சு இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. டேஸ்ட் அருமையா இருக்கும்...

Posted By:

Ulunthu Chutney Recipe In Tamil: காலையில் இட்லி தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுவரை வீட்டில் செய்திராத சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் உளுத்தம் பருப்பு இருந்தால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு சட்னியை செய்யுங்கள். இந்த உளுந்து சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு உளுந்து சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உளுந்து சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Ulunthu Chutney How To Make a Ulunthu Chutney Recipe

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* வரமிளகாய் - 5
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* மஞ்சள் தூள் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மல்லி, பூண்டு, வரமிளகாய், சீரகம் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி, ஒரு தட்டில் வறுத்த பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு வாணலியில் உள்ள மீதமுள்ள எண்ணெயில் நறுக்கிய தக்காளி, புளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு பச்சை வாசனை போகும் வரை மென்மையாக வதக்கி இறக்கி, அதையும் குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கிய தக்காளியை சேர்த்து ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான உளுந்து சட்னி தயார்.

Image Courtesy: Today's Samayal

[ of 5 - Users]
Story first published: Thursday, July 4, 2024, 7:20 [IST]
Desktop Bottom Promotion