For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இவ்ளோ சுவையான பாயாசம் இதுவரை சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க... யுகாதிக்கு ட்ரை பண்ணுங்க...

With Ugadi almost approaching, we can't wait to indulge in all the Ugadi-special delicacies, some homemade dishes that we will cherish for the entire month now. Amongst all the Ugadi-special dishes li

Posted By: R. SUGANTHI Rajalingam
|
ரவை பாயாசம் ரெசிபி | ரவா கீர் ரெசிபி | Rava Payasam Recipe | Boldsky

ரவா கீர் அல்லது சுஜி கீர் என்பது பண்டிகைகளின் போதும் விரதங்களின் போதும் விரும்பி செய்யப்படும் ரெசிபி ஆகும். பண்டிகைகளின் போது நிலவும் பரபரப்பான வேலை சூழ்நிலையில் கூட நீங்கள் இந்த ரெசிபியை எளிதாக செய்து அசத்திடலாம். இது சுவையோடு ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய ரெசிபி யும் கூட. சுவை மிகுந்த க்ரீமி டேஸ்டுடன் உங்கள் விருந்தினருக்கும் விருந்தளிக்கலாம்.

ரவையில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன்கள் உங்களுக்கு நல்ல வயிறு நிரம்பிய திருப்தியை தருவதோடு இதன் சுவையும் உங்கள் நாக்கில் அப்படியே ஒட்டிக் கொள்ளும்.

பண்டிகை என்றாலே நாவை தித்திக்கும் இனிப்பு வகைகளைத் தான் நாம் விரும்புவோம். அதிலும் அப்படியே மணம் கமிழ ரவையில் நெய் சொட்ட சொட்ட ஏலக்காய் மணத்துடன் வறுத்த முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை பழங்களை தூவி ஒரு டிஷ் செய்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக உங்கள் நாவை எச்சு ஊறச் செய்து விடும் அல்லவா.

சரி வாங்க உங்கள் நாவிற்கு விருந்தளிக்கும் சுவை மிகுந்த ரவா கீர் எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

Ugadi receipe
ரவா கீர் ரெசிபி /சுஜி கீர் ரெசிபி செய்வது எப்படி /உகாதி ஸ்பெஷல் ரவா பாயாசம் ரெசிபி/ரவா கீர் செய்முறை விளக்கம் /ரவா கீர்
ரவா கீர் ரெசிபி /சுஜி கீர் ரெசிபி செய்வது எப்படி /உகாதி ஸ்பெஷல் ரவா பாயாசம் ரெசிபி/ரவா கீர் செய்முறை விளக்கம் /ரவா கீர்
Prep Time
5 Mins
Cook Time
15M
Total Time
20 Mins

Recipe By: காவ்யா

Recipe Type: டிசர்ட்

Serves: 2

Ingredients
  • ரவை - 3/4 கப்

    ஏலக்காய் பொடி - 2 டீ ஸ்பூன்.

    நெய் - 1-2 டேபிள் ஸ்பூன்

    சர்க்கரை - 1 கப்

    முந்திரி பருப்பு (உடைத்தது) - 8-10

    உலர்ந்த திராட்சை பழங்கள் - 10-12

    பால் - 1/2 பெளல்

    தண்ணீர் - 4-5 கப்

Red Rice Kanda Poha
How to Prepare
  • ஒரு கடாயை எடுத்து கொள்ளுங்கள்.

    2 நிமிடங்கள் கடாய் சூடானதும் நெய்யை ஊற்றவும்

    நெய் உருகும் வரை காத்திருக்க வேண்டும். நெய் நன்கு காய்ந்ததும் அதில்

    முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை பழங்கள் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்

    வறுத்ததை எடுத்து ஒரு பெளலில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது அதே கடாயில் ரவையை பொட்டி சில நிமிடங்கள் வறுக்கவும்

    கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பிறகு அதில் பால் சேர்த்து கிளறிக் கொண்டே கட்டியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்

    மிதமான தீயில் 4-5 நிமிடங்கள் சமைக்கவும். இப்பொழுது சர்க்கரையை சேர்த்து சர்க்கரை முழுமையாக கரையும் வரை காத்திருக்கவும்

    இப்பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை பழங்கள், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    சில நிமிடங்கள் அப்படியே அடுப்பில் வைத்து இருக்கவும்

    பிறகு ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்

    சூடாக அல்லது ஆறிய பிறகு பரிமாறவும்.

    சுவையான ரவா கீர் ரெடி

Instructions
  • ரவையை கிளறும் போது கட்டியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்
  • கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்க்க வேண்டும். கீர் சரியான பதத்தில் இருக்குமாறு கட்டியில்லாமல் சேர்க்கவும்
  • கீரின் பதத்தை பொருத்து தேவையென்றால் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்.
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 1 பெளல்
  • கலோரிகள் - 284 கலோரிகள்
  • கொழுப்பு - 10 கிராம்
  • புரோட்டீன் - 24 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 22 கிராம்
  • சர்க்கரை - 6 கிராம்
  • நார்ச்சத்து - 4 கிராம்

படத்துடன் செய்முறை விளக்கம் : ரவா கீர் செய்வது

எப்படிஒரு கடாயை எடுத்து கொள்ளுங்கள்.

2 நிமிடங்கள் கடாய் சூடானதும் நெய்யை ஊற்றவும்

நெய் உருகும் வரை காத்திருக்க வேண்டும். நெய் நன்கு காய்ந்ததும் அதில்
முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை பழங்கள் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்

வறுத்ததை எடுத்து ஒரு பெளலில் வைத்து கொள்ளவும்.

இப்பொழுது அதே கடாயில் ரவையை பொட்டி சில நிமிடங்கள் வறுக்கவும்

கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பிறகு அதில் பால் சேர்த்து கிளறிக் கொண்டே கட்டியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்

மிதமான தீயில் 4-5 நிமிடங்கள் சமைக்கவும். இப்பொழுது சர்க்கரையை சேர்த்து சர்க்கரை முழுமையாக கரையும் வரை காத்திருக்கவும்

இப்பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை பழங்கள், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

சில நிமிடங்கள் அப்படியே அடுப்பில் வைத்து இருக்கவும்

பிறகு ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்

சூடாக அல்லது ஆறிய பிறகு பரிமாறவும்.

சுவையான ரவா கீர் ரெடி

[ 5 of 5 - 101 Users]
Read more about: recipe
English summary

Ugadi Special Rava Payasam Recipe

With Ugadi almost approaching, we can't wait to indulge in all the Ugadi-special delicacies, some homemade dishes that we will cherish for the entire month now. Amongst all the Ugadi-special dishes like rava payasa or suji ki kheer has a special place in our heart for their unctuous deliciousness and rich texture, pair
Desktop Bottom Promotion