Latest Updates
-
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும்
Udupi Mullangi Chutney Recipe in Tamil: காலையில் இட்லி, தோசைக்கு ஒரு அசத்தலான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் ஒரு சத்தான சைடுஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் முள்ளங்கி உள்ளதா? அப்படியானால் அதை வைத்து உடுப்பி ஸ்டைலில் ஒரு சூப்பரான சட்னி செய்யுங்கள்.

பொதுவாக மக்கள் அதிகம் வெறுக்கும் காய்கறிகளில் முள்ளங்கிக்கு எப்போதும் தனியிடம் உண்டு. அதன் வாசனையே பலருக்கும் பிடிக்காது. முள்ளங்கியை எப்போதும் சாம்பார் வைத்தே கொடுப்பதால் அவர்கள் அதை வெறுக்கலாம். ஆனால் இந்த உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி சட்னி முள்ளங்கி பிடிக்காதவர்களை கூட சாப்பிட வைக்கும் வகையில் சுவையாக இருக்கும். இந்த சட்னி சுவையானது என்பதை விட மிகவும் ஆரோக்கியமானது.
உங்களுக்கு உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி சட்னியை எப்படி செய்வதன்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உடுப்பி முள்ளங்கி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
-1 முள்ளங்கி, நறுக்கியது
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் தனியா
- ½ ஸ்பூன் சீரகம்
- 5 காய்ந்த மிளகாய்
- 3 பல் பூண்டு
- 1 இன்ச் இஞ்சி, நறுக்கியது
- ½ வெங்காயம், நறுக்கியது
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- சிறிய துண்டு புளி
- 2 ஸ்பூன் தண்ணீர்
தாளிக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 3 பல் பூண்டு(நசுக்கியது)
- சிறிது கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு முள்ளங்கியின் தோலை நீக்கிவிட்டு, அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் 1 ஸ்பூன் கடலைப்பருப்பு, 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 ஸ்பூன் மல்லி விதைகள், ½ ஸ்பூன் சீரகம் மற்றும் 5 காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- வாசனை வரும் வரை மசாலாப் பொருட்களை மிதமான தீயில் வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்.
- பின்னர் அதே கடாயில் 3 பல் பூண்டு மற்றும் 1 இன்ச் இஞ்சி சேர்த்து சற்று வதக்கவும்.
- இப்போது 2 கப் நறுக்கிய முள்ளங்கியைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின்னர் பாதி வெங்காயத்தைச் சேர்த்து அது மென்மையாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் உப்பு, ஒரு சிறிய துண்டு புளி மற்றும் 2 ஸ்பூன் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- மூடி வைத்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
- முள்ளங்கி சற்று மென்மையாகும் வரை சமைத்து, பின் முழுமையாக ஆறவிடவும்.
- இப்போது தனியாக எடுத்து வைத்துள்ள மசாலாப் பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
- அதனுடன் வேகவைத்த முள்ளங்கியையும் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- சட்னியை தாளிப்பதற்கு ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் சூடாக்கவும். அதில் 1 டீஸ்பூன் கடுகு, ½ டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 3 பல் பூண்டு மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும், இந்தத் தாளிப்பைச் சட்னியின் மீது ஊற்றவும்.
- அவ்வளவுதான் சுவையான உடுப்பி முள்ளங்கி சட்னி ரெடி. இது இட்லி. தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications