Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சப்பாத்திக்கு ஒருமுறை இந்த குருமாவை செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி அதிகமா சாப்பிடுவாங்க..
Tomato Peanut Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் பெரும்பாலும் இரவு சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்பவும் ஒரே மாதிரி தான் குருமாவை செய்வீர்களா? இப்படி ஒரே மாதிரி சாப்பிட்டு போரடித்துவிட்டதா?
அப்படியானால் உங்கள் வீட்டில் தக்காளியும், வேர்க்கடலையும் இருந்தால், அதைக் கொண்டு அற்புதமான சுவையில் குருமாவை செய்யுங்கள். இந்த தக்காளி வேர்க்கடலை குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, இட்லி, தோசையுடனும் சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி வேர்க்கடலை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி வேர்க்கடலை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
வேக வைப்பதற்கு...
* கனிந்த தக்காளி - 6
* வரமிளகாய் - 3
* பூண்டு - 6
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/4 மூடி (நறுக்கியது)
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - சிறிய துண்டு
* கிராம்பு - 3
* வறுத்த வேர்க்கடலை - 1/2 கப் அல்லது 2 கைப்பிடி
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில்
தக்காளி, வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து, தக்காளியின் தோல்
சுருங்கும் வரை வேக வைக்க வேண்டும்.
* தக்காளியின் தோல் சுருங்கியதும், அவற்றை ஒரு தட்டில் எடுத்து வைத்து
குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு, பட்டை, கிராம்பு சேர்த்து
ஒருமுறை அரைத்து, பின் அதில் வேர்க்கடலையை சேர்த்து அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு
நீரை ஊற்றி 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான தக்காளி வேர்க்கடலை குருமா தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications