Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
3 தக்காளியும், 1 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல சப்பாத்திக்கு சைடு டிஷ் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
Tomato Onion Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் ஏதாவது ஒரு வேளை கட்டாயம் சப்பாத்தி செய்வீர்களா? எப்போது சப்பாத்தி செய்தாலும், அதற்கு சைடு டிஷ்ஷை தேர்வு செய்வது மட்டும் கடினமாக இருக்குமா?
உங்களுக்காக வீட்டில் வேறு எந்த காயும் இல்லாத வேளையில், வெங்காயமும், தக்காளியும் மட்டும் இருந்தாலே, அற்புதமான மசாலா செய்யலாம். முக்கியமாக இந்த மசாலாவை 10 நிமிடத்தில் செய்து விடலாம். பேச்சுலர்கள், வேலைக்கு செல்பவர்கள் இப்படியான சைடு டிஷ் ரெசிபிக்களை தெரிந்து வைத்துக் கொண்டால், சமையலை எளிதில் முடித்துவிடலாம்.

உங்களுக்கு தக்காளி வெங்காய மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி வெங்காய மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (சதுர துண்டுகளாக வெட்டியது) + 1 (பொடியாக
நறுக்கியது)
* தக்காளி - பாதி (சதுர துண்டுகளாக வெட்டியது) + 3 (அரைத்தது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சதுரத் துண்டுகளாக நறுக்கிய பாதி தக்காளி மற்றும்
வெங்காயத்தை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் சீரகத்தை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய
வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 3 தக்காளியை அரைத்து ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, எண்ணெய் பிரிய வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 2 ஸ்பூன் தயிரை சேர்த்து கிளறி, அதோடு மிளகாய் தூள்,
மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, எண்ணெய்
பிரிய கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக வதக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை சேர்த்து,
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான வெங்காயம் தக்காளி
மசாலா தயார்.



Click it and Unblock the Notifications