Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
மழை நேரத்துல ஒருடைம் இந்த மாதிரி ரசம் வெச்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Tomato Lemon Rasam Recipe In Tamil: சமையலிலேயே ரசம் வைப்பது தான் மிகவும் ஈஸியானது. அதே சமயம் அந்த ரசத்தை சரியான பக்குவத்தில் வைத்தால் தான் சாப்பிட முடியும். ரசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. உங்களுக்கு புளி சேர்த்த ரசம் சேராது என்றால், புளி சேர்க்காமலேயே ரசம் செய்யலாம். அது தான் தக்காளி லெமன் ரசம்.
இந்த ரசம் மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். இந்த ரசத்தை சூடான சாதம் மற்றும் உருளைக்கிழங்கு வறுவலுடன் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். மதியம் சிம்பிளாக சமையலை முடிக்க நினைத்தால், இதை செய்யலாம்.

உங்களுக்கு தக்காளி லெமன் ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி லெமன் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீர்
* தக்காளி - 2
* பச்சை மிளகாய் - 1
* பூண்டு - 5 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* ரசப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை - பாதி
* நெய் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் இந்த ரசம் செய்வதற்கு துவரம் பருப்பு நீரை தயாரித்து
எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் சாம்பார் செய்ய துவரம்
பருப்பை வேக வைத்திருந்தால், அந்த பருப்பு நீரை வடிகட்டி எடுத்துக்
கொள்ளலாம்.
* இல்லாவிட்டால் துவரம் பருப்பை குக்கரில் போட்டு, அதில் தேவையான அளவு
நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூளை சிறிது சேர்த்து,
அத்துடன் 2 தக்காளியையும் சேர்த்து, குக்கரை மூடி , அடுப்பில் வைத்து,
3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பு நீரை மட்டும் வடிகட்டி
ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன் வேக வைத்த 2
தக்காளியையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த பருப்பு நீருடன் 1 பச்சை மிளகாயை உடைத்து சேர்த்து,
அத்துடன் பூண்டு பற்களை தட்டிப் போட்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி,
உப்பு சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* அதன் பின் ரசப்பொடியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வரமிளகாய், கொத்தமல்லி சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் கரைத்து வைத்துள்ள ரசத்தை ஊற்றி, நுரை கட்டும் வரை வேக
வைக்க வேண்டும். ரசத்தில் நுரைகட்டத் தொடங்கியதும், அதில் எலுமிச்சை
சாற்றினை சேர்த்து கலந்து, அடுப்பை அணைத்துவிட்டு, நெய் ஊற்றி
கலந்தால், சுவையான தக்காளி லெமன் ரசம் தயார்.



Click it and Unblock the Notifications
