Latest Updates
-
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
தக்காளியுடன் இந்த 2 பொருளை சேர்த்து வித்தியாசமான தக்காளி சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செம சைடிஷா இருக்கும்!
Tomato Ginger Chutney Recipe in Tamil: காலை அல்லது மாலையில் பெரும்பாலான வீடுகளில் இட்லி அல்லது தோசைதான் பிரதான உணவாக இருக்கும். இட்லி அல்லது தோசை செய்வது மிகவும் எளிதானதாக இருக்கலாம் ஆனால் அதற்கு சைடிஷ் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
இட்லி, தோசைக்கு டக்கென்று ஒரு சட்னியை செய்ய வேண்டுமா? தினமும் இட்லி, தோசைக்கு சைடிஷ் செலக்ட் செய்வது ஒரு பெரிய வேலையாக இருக்கும். உங்களுக்காகவே ஒரு வித்தியாசமான சட்னி ரெசிபியை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்.

அந்த வகையில் இன்று அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சட்னியைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இது தக்காளி சட்னிதான், ஆனால் வழக்கமான தக்காளி சட்னி அல்ல. நீங்கள் இதுவரை எத்தனையோ சுவையில் தக்காளி சட்னியை செய்திருப்பீர்கள். ஆனால் இந்த ஸ்டைலில் தக்காளி சட்னியை செய்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை.
உங்களுக்கு தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
தேவையானப் பொருட்கள்:
- தக்காளி - 2
- வர மிளகாய் - 5
- உளுந்து - 1 ஸ்பூன்
- வேர்க்கடலை - 1 ஸ்பூன்
- இஞ்சி - ஒரு துண்டு
- வெல்லம் - சிறிய துண்டு
- தேங்காய் - கால் கப்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 1 ஸ்பூன்
தாளிக்க:
- கடுகு - அரை ஸ்பூன்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- தக்காளியை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உளுந்தம் பருப்பு, வேர்க்கடலை
மற்றும் வர மிளகாய் சேர்த்து,
பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஆற வைக்கவும்.
- பின்னர் இஞ்சி மற்றும் தக்காளியைச் சேர்த்து தக்காளி சுருங்கும் வரை வதக்கவும். இதையும் நன்றாக ஆற வைக்கவும்.
- இதை வெல்லம் மற்றும் தேங்காய் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைக்கவும்.
- இதனை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும் சட்னியில் சேர்த்து நன்கு கிளறினால் சூப்பரான தக்காளி இஞ்சி சட்னி ரெடி.



Click it and Unblock the Notifications
