தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..

Posted By:

Tomato Dosa With Udupi Peanut Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் தோசை சுட மாவு இல்லையா? அப்போது சட்டென்று ஒரு காலை டிபனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தக்காளி இருந்தால், அந்த தக்காளியைக் கொண்டு அருமையான சுவையில் தோசை செய்து சாப்பிடுங்கள். இந்த தக்காளி தோசைக்கு உடுப்பி வேர்க்கடலை சட்னி பொருத்தமாக இருக்கும். முக்கியமாக இந்த டிபன் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Tomato Dosa With Udupi Peanut Chutney How To Make This Tasty Breakfast Recipe

உங்களுக்கு இந்த தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி தோசை மற்றும் உடுப்பி வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

தக்காளி தோசைக்கு..

* தக்காளி - 2
* காஷ்மீரி வரமிளகாய் - 1
* வரமிளகாய் - 2
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* ரவை - 1/2 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப் + 1 கப்
* கறிவேப்பிலை - சிறிது
* மிளகு - 10
* எண்ணெய் - தேவையான அளவு

வேர்க்கடலை சட்னிக்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* தோல் நீக்கிய வறுத்த வேர்க்கடலை - 1/2 கப்
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 4
* கறிவேப்பிலை - 3 இலைகள்
* புதினா - 5 இலைகள்
* பூண்டு - 1 பெரிய பல்
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* தண்ணீர் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு...

* எணணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் தக்காளி, காஷ்மீரி வரமிளகாய், வரமிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் அரைத்ததை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1/2 கப் ரவை, 1/4 கப் அரிசி மாவு, மைதா சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 கப் நீரை ஊற்றி, சிறிது நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் நறுக்கிய கறிவேப்பிலை, மிளகு சேர்த்து கலந்து, மீண்டும் 1 கப் நீரை ஊற்றி ரவா தோசை பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், மாவை அள்ளி ஊற்றி, ரவா தோசை போன்று விட்டு, மிதமான தீயில் வைத்து மொறுமொறுவென்று வேக வைத்து எடுத்தால், தக்காளி தோசை தயார்.
* அடுத்து சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடலை, பொட்டுக்கடலை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய், பூண்டு, புதினா, புளி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் சிறிது கொத்தல்லியை சேர்த்து அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான உடுப்பி வேர்க்கடலை சட்னி தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion