Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
ரோட்டுக்கடை தக்காளி சட்னி ரெசிபி... இந்த சூப்பரான சட்னிக்கு பூண்டு, வெங்காயம் எதுவுமே தேவையில்ல...!
Tomato Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷ் என்றால் அது எப்போதுமே சட்னிதான். சட்னிகளில் பல வகைகள் உள்ளது. பொதுவாக இட்லி, தோசைக்கு அனைவருக்கும் பிடித்த சுவையான மற்றும் எளிய சட்னி என்றால் அது தேங்காய் சட்னிதான். ஆனால் தேங்காய் சட்னி போலவே மிகவும் பிரபலமான மற்றொரு சட்னி தக்காளி சட்னிதான்.
தக்காளி சட்னியின் பொதுவான மூலப்பொருள் தக்காளியாக இருந்தாலும், அதனுடன் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை சேர்த்து செய்யும் போதுதான் முழுமையான சுவை கிடைக்கும். ஆனால் ஹோட்டல்களில் பூண்டு, வெங்காயம் மற்றும் தேங்காய் என எதுவுமே சேர்க்காமல் சூப்பரான ஒரு சட்னி பரிமாறுவார்கள். அந்த சூப்பரான சட்னியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- பழுத்த தக்காளி - 2 அளவு
- உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
- மல்லி விதைகள் - 1/2 தேக்கரண்டி
- வர மிளகாய் - 4
- கறிவேப்பிலை - 1 கொத்து
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- புளி - சிறிதளவு
- சமையல் எண்ணெய் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்ப
- தண்ணீர் - தேவைக்கேற்ப
தாளிக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- தக்காளியை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி, தனியாக வைக்கவும்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, அதில் உளுத்தம்பருப்பை வறுக்கவும். அதன்பின் கடலைப் பருப்பு, மல்லி விதைகள், பெருங்காயம் மற்றும் வர மிளகாய் முதலியவற்றை போடவும். பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- நறுக்கிய தக்காளி, சிறிதளவு புளி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
- வதக்கிய கலவையை நன்கு ஆற விடவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைக்கவும். இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- இதை அப்படியே சாப்பிடாலம், இல்லையெனில் தாளித்தும் சாப்பிடலாம். சட்னியை தாளிக்க ஒரு சிறிய கடாயில் 1 ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து, சட்னியுடன் சேர்த்து, நன்கு கலந்து சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.
- உங்களுக்கு சட்னி கலர்புல்லாக வேண்டுமென்றால் சட்னியில் 2 காஷ்மீர் மிளகாயை வதக்கி சேர்த்து அரைக்கவும்.



Click it and Unblock the Notifications
