Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
கையேந்தி பவன் தக்காளி சட்னி ருசியா இருக்க ரகசியம் இதாங்க.. ஒருமுறை செஞ்சு பாருங்க..
Kaiyendhi Bhavan Tomato Chutney Recipe In Tamil: காலை வேளையில் பெரும்பாலும் உங்கள் வீட்டில் இட்லி தான் செய்வீர்களா? தினமும் இட்லிக்கு ஒரே மாதிரியான சட்னியை செய்து போரடித்துவிட்டதா? ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் தக்காளி சட்னியைத் தான் விரும்பி சாப்பிடுவார்களா? இருந்தாலும் ஒரே மாதிரி தக்காளி சட்னியை செய்து அலுத்துவிட்டதா?
அப்படியென்றால் அடுத்தமுறை தக்காளி சட்னியை செய்வதாக இருந்தால், கையேந்தி பவன் ஸ்டைலில் தக்காளி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னியின் ஸ்பெஷலே அதில் சேர்க்கப்படும் ஒரு பொருள் தான். அது தான் இட்லி மாவு. இது தான் இந்த சட்னிக்கு ஒரு தனித்துவமான சுவையைத் தருகிறது.

உங்களுக்கு கையேந்தி பவன் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கையேந்தி பவன் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 7-8
* பூண்டு - 8 பல்
* வரமிளகாய் - 6
* காஷ்மீரி வரமிளகாய் - 3
* பெரிய தக்காளி - 3
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புளித்த இட்லி மாவு - 1/4 கப்
* தண்ணீர் - 4-5 கப்
* நாட்டுச் சர்க்கரை - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு,
வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து சற்று கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்
தூள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து கிளறி, 3
கப் நீரை ஊற்றி 5 நிமிடம் மூடி வைத்து பச்சை வாசனை போக கொதிக்க
வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் புளித்த இட்லி மாவை
சேர்த்து1 கப் நீரை கரைத்து, 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் நாட்டுச்சர்க்கரை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 1
நிமிடம் கொதிக்க வைத்து, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான கையேந்தி பவன் தக்காளி சட்னி தயார்.
Image Courtesy: Gomathi's Kitchen



Click it and Unblock the Notifications
