Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
தக்காளி துளசி சட்னி
பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி தான் சரியான காம்பினேஷன். நீங்கள் சட்னி பிரியராக இருந்தால், அதுவும் வித்தியாசமான சட்னியை சுவைக்க விரும்புபவரானால், தக்காளி துளசி சட்னியை செய்து சாப்பிடுங்கள்.
உங்கள் வீட்டில் இன்று இரவு இட்லி அல்லது தோசை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அதற்கு ஒரு வித்தியாசமான, அதே வேளையில் எளிமையாக செய்யக்கூடிய ஒரு சைடு டிஷ் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி தான் சரியான காம்பினேஷன். நீங்கள் சட்னி பிரியராக இருந்தால், அதுவும் வித்தியாசமான சட்னியை சுவைக்க விரும்புபவரானால், தக்காளி துளசி சட்னியை செய்து சாப்பிடுங்கள். இந்த தக்காளி துளசி சட்னி செய்வது மிகவும் சுலபம். மேலும் அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடியவாறான சுவையில் இருக்கும்.

உங்களுக்கு தக்காளி துளசி சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி துளசி சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 6 பல்
* வரமிளகாய் - 6
* தக்காளி - 2 (நறுக்கியது)
* துளசி - ஒரு கையளவு
* புளி - ஒரு துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புளி, உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு துளசி சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* நன்கு குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்தால், சுவையான தக்காளி துளசி சட்னி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
