Latest Updates
-
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க..
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
Tirunelveli Araichuvitta Sambar Recipe in Tamil: மதியம் சாதத்திற்கு என்ன சைடிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஒரு அட்டகாசமான சுவையில் வித்தியாசமான சாம்பார் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியெனில் திருநெல்வேலி ஸ்டைல் சாம்பார் செய்யுங்கள். இந்த சாம்பார் நாம் வழக்கமாக செய்யும் சாம்பாரை விட சற்று வித்தியாசமானது.

என்ன வித்தியாசம் என்றால் இந்த சாம்பாரில் தேங்காய், வெங்காய மசாலா அரைத்து ஊற்றி செய்ய வேண்டும். இந்த அரைச்சு விட்ட சாம்பார் சாதத்திற்கு மட்டுமின்றி, இட்லி, தோசைக்கும் அட்டகாசமாக இருக்கும். மேலும் இது பேச்சுலர்களும் செய்யும் வகையில் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். ஒரே மாதிரியான சாம்பார் சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த சாம்பார் புதிய சுவையைக் கொடுக்கும்.
உங்களுக்கு திருநெல்வேலி ஸ்டைல் சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திருநெல்வேலி ஸ்டைல் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- புளி - எலுமிச்சை அளவு
- துவரம் பருப்பு - ½ கப்
- சின்ன வெங்காயம் - 20
- நறுக்கிய காய்கறி - 2 கப்
- மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
அரைக்க:
- சின்ன வெங்காயம் - 5
- வர மிளகாய் - 5
- சீரகம் - 1 ஸ்பூன்
- தேங்காய் - ¼ கப்
தாளிக்க:
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
- வெந்தயம் - அரை ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- புளியை ஒரு கப் சூடான நீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து, அதன் சாற்றைப் பிழிந்து எடுக்கவும். மீண்டும் புளியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து, மீதமுள்ள சாற்றையும் பிழிந்து எடுத்து தனியாக வைக்கவும்.
- துவரம் பருப்பை நன்றாகக் கழுவி, அதனுடன் போதுமான அளவு தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- இதை குக்கரில் வைத்து, பருப்பு நன்கு குழைந்து மென்மையாகும் வரை வேகவைக்கவும். பிறகு அதைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில் சின்ன வெங்காயம், வர மிளகாய், சீரகம் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதையும் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் கடுகு மதுரம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- அதன்பணி சீரகம், வெந்தயம், உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்கவும்.
- உளுத்தம் பருப்பு நிறம் மாறியதும் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி, பின்னர் நறுக்கி வாய்த்த காய்கறிகளைச் சேர்க்கவும்.
- அதை 2-3 நிமிடங்கள் வதக்கிய பிறகு, அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.
- பின்னர் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- புளியின் பச்சை வாசனை நீங்கி, காய்கறிகள் வேகும் வரை இந்தக் கலவையை 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- சாம்பார் நன்கு கொதித்ததும் நறுக்கிய கொத்தமல்லியை தூவி இறக்கினால் சுவையான திருநெல்வேலி ஸ்டைல் சாம்பார் ரெடி!



Click it and Unblock the Notifications
