Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
4 ஸ்பூன் துவரம் பருப்பு இருந்தா போதும்.. கிராமத்து பாட்டிக்கடை டிபன் சாம்பாரை செய்யலாம்... எப்படி-ன்னு பாருங்க
Village Style Tiffen Sambar Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் உள்ளோர் இட்லி, தோசை செய்தால் சரியாக சாப்பிடுவதில்லையா? இதற்கு நீங்கள் செய்யும் ஒரே மாதிரியான சைடு டிஷ் காரணமாக இருக்கலாம். எனவே இட்லி, தோசைக்கு எப்போதும் ஒரே சுவையில் சட்னி, சாம்பார் செய்யாமல், ஒருமுறை கிராமத்து பாட்டிக்கடை டிபன் சாம்பாரை செய்யுங்கள்.
இந்த சாம்பார் செய்ய குறைவான அளவில் துவரம் பருப்பு இருந்தாலே போதுமானது. நிறைய சாம்பார் செய்யலாம். முக்கியமாக இந்த சாம்பாரை செய்தால், எல்லோரும் ஊற்றி ஊற்றி குடிப்பார்கள். அந்த அளவில் ருசியாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு கிராமத்து பாட்டிக்கடை டிபன் சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிராமத்து பாட்டிக்கடை டிபன் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* தண்ணீர்- 4 டம்ளர்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 20
* வரமிளகாய் - 5
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் கழுவிவிட்டு, பின் அதில் சுத்தமான
நீரை ஊற்றி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயம் மற்றும்
சீரகத்தை போட்டு வறுத்து இறக்கி குளிர வைத்து பொடி செய்து கொள்ள
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் ஊற வைத்த துவரம் பருப்பை சேர்த்து, அத்துடன்
வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், வரமிளகாய் சேர்த்து நன்கு நிறம் மாற
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சிறிது
உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து, தேவையான
அளவு நீரை ஊற்றி, கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, வேண்டுமானால்
சிறிது நீரை ஊற்றி, துவரம் பருப்பின் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான கிராமத்து
பாட்டிக்கடை டிபன்/இட்லி சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications
