Latest Updates
-
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும்
சன்டே ஸ்பெஷல் திருவனந்தபுரம் சிக்கன் ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Thiruvananthapuram Chicken Fry Recipe In Tamil: இந்த வார விடுமுறை நாளில் உங்கள் வீட்டில் சிக்கன் வாங்க போகிறீர்களா? அதுவும் சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் திருவனந்தபுரம் சிக்கன் ப்ரை ரெசிபியை செய்து சாப்பிடுங்கள். இந்த சிக்கன் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அட்டகாசமான சுவையுடனும் இருக்கும். நீங்கள் எப்போதும் சிக்கன் 65 செய்து சாப்பிடுபவரானால், ஒருமுறை இந்த சிக்கன் ப்ரை ரெசிபியை செய்து சாப்பிடுங்கள்.

உங்களுக்கு இந்த திருவனந்தபுரம் சிக்கன் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திருவனந்தபுரம் சிக்கன் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1/2 கிலோ
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* எலுமிச்சை - 1/2
வதக்குவதற்கு..
* தேங்காய் எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1 கையளவு (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த சிக்கனுடன் மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள்,
சீரகத் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, சில்லி ப்ளேக்ஸ் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பாதி எலுமிச்சையை
சேர்த்து நன்கு பிரட்டி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி
சூடானதும், ஊற வைத்த சிக்கனை சேர்த்து 10 நிமிடம் கிளறி விட்டு வேக
வைத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும்
பெரிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி, வெங்காயம் கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் ப்ரை செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி,
குறைவான தீயில் வைத்து, 10 நிமிடம் கிளறி விட்டு வேக வைத்து
எடுத்தால், சுவையான திருவனந்தபுரம் சிக்கன் ப்ரை தயார்.



Click it and Unblock the Notifications
