Latest Updates
-
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
இட்லி, தோசைக்கு இந்த திடீர் தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்...
Thideer Thakkali Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு டக்கென்று ஒரு சட்னியை செய்ய வேண்டுமா? தினமும் இட்லி, தோசைக்கு சைடு டிஷ்ஷை செலக்ட் செய்வது ஒரு பெரிய வேலையாக உள்ளதா? உங்களுக்காகவே தமிழ் போல்ட் ஸ்டைல் உங்களின் வசதிக்காக தினமும் காலையில் இட்லி, தோசைக்கான சில சைடு டிஷ்ஷை வழங்கி வருகிறது.
அந்த வகையில் இன்று அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சட்னியைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த சட்னியின் பெயர் திடீர் தக்காளி சட்னி. நீங்கள் இதுவரை எத்தனையோ சுவையில் தக்காளி சட்னியை செய்திருப்பீர்கள். ஆனால் நிச்சயம் இந்த ஸ்டைலில் தக்காளி சட்னியை செய்திருக்கமாட்டீர்கள்.

இந்த தக்காளி சட்னி நீங்கள் வழக்கமாக செய்யும் சட்னியை விட செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். இந்த சட்னிக்கு ஒருசில பொருட்களே போதுமானது. முக்கியமாக இதற்கு வெங்காயம் எதுவும் தேவையில்லை.
உங்களுக்கு திடீர் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திடீர் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* நன்கு கனிந்த தக்காளி - 3 (நறுக்கியது)
* சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு -1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - 2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் நன்கு கனிந்த தக்காளி, சாம்பார் தூள்
மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், 1 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1
டீஸ்பூன் சீரகம், 1 கொத்து கறிவேப்பிலை, 2 வரமிளகாய், 2 பச்சை
மிளகாய், பொடியாக நறுக்கிய 2 இன்ச் இஞ்சி சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள்
சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து, 2 கப்
நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் சிறிது உப்பு சேர்த்து,
5-7 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான
திடீர் தக்காளி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications