Latest Updates
-
செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபி - உருளைக்கிழங்கை இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பணத்தாசை கொண்டவர்களாம் - இவங்களுக்கு பணம்தான் முக்கியமாம் -
உங்கள் கையில் விதி ரேகை இல்லாமல் இருப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? உண்மை என்னனு தெரிஞ்சிக்கோங்க -
வாஸ்துப்படி இந்த 5 சிலைகளை வீட்டுல வாங்கி வையுங்க.. வீட்டில் பணப்பிரச்சனையே வராது.. -
தலையணைக்கு அடியில் இந்த 5 பொருட்களில் ஒன்றை வைத்து தூங்குவது உங்களுக்கு சகல நன்மைகளையும் கொடுக்குமாம் -
1 கப் அவலும், 1 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
2 முட்டை இருந்தா இந்த மாதிரி அவிச்ச முட்டை ஆம்லெட் ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா வேற லெவலில் இருக்கும் -
உங்க தலைமுடி வறண்டு தேங்காய் நார் போல் இருக்கா? அப்ப வீட்டிலேயே இந்த கெரட்டின் ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
பீர்க்கங்காய் வெச்சு இப்படி ஒருடைம் பருப்பு கறி செய்யுங்க.. சாதம், இட்லி, தோசைக்கும் செமயா இருக்கும்..
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க..
Thayir Kuzhambu Recipe In Tamil: மதிய வேளையில் சமைக்க சோம்பேறித்தனமா இருக்கா? டக்குன்னு சமையலை முடிக்கணுமா? உங்கள் வீட்டில் தயிர் உள்ளதா? அப்படியானால் அந்த தயிரைக் கொண்டு அட்டகாசமான சுவையில் குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பு 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் ஈஸியாகவும் இருக்கும், சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். ஒருமுறை இந்த குழம்பை செய்தால் பின் அடிக்கடி செய்வீர்கள். அந்த அளவில் சுவை பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த தயிர் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தயிர் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 5
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மோர்மிளகாய் - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 2 இன்ச் (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 1 (நறுக்கியது)
* தயிர் - 2 1/2 கப்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் தயிரை நன்கு கட்டிகளின்றி அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய், கறிவேப்பிலை, மோர் மிளகாய் ஆகியவற்றை
சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து குறைவான தீயில்
வைத்து கிளறி, நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சியை சேர்த்து
சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து தீயை குறைத்து,
கைவிடாமல் நன்கு கிளறி பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, தயிர்
சூடானதும் இறக்கி விட்டு, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான தயிர்
குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications
