Latest Updates
-
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
சிக்கன் வாங்குனா 65 செய்யாம.. ஒருடைம் இந்த தட்டுக்கடை சிக்கன் ப்ரை ட்ரை பண்ணுங்க.. சுவை அள்ளும்..
Thattukadai Chicken Fry Recipe In Tamil: மதியம் உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? அதுவும் சிக்கன் 65 செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் எப்போதும் ஒரே மாதிரி சிக்கன் 65 செய்யாமல், ஒருமுறை தட்டுக்கடை சிக்கன் ப்ரை செய்யுங்கள்.
இந்த மாதிரி சிக்கன் ப்ரை செய்யும் போது, சிக்கன் நன்கு சுவையாகவும், மென்மையாகவும் இருப்பதோடு, அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் ப்ரை செய்வதறகு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு தட்டுக்கடை சிக்கன் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தட்டுக்கடை சிக்கன் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டியது)
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சில்லி ப்ளக்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த சிக்கனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா,
மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் மிளகுத் தூள், சில்லி ப்ளேக்ஸ், கடலை மாவு, சோள மாவு,
எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து
கொள்ள வேண்டும். முக்கியமாக நீர் ஊற்றாமல் கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து, குறைந்தது 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
சிக்கனை எவ்வளவு நேரம் ஊற வைக்கிறோமோ, அந்த அளவில் சிக்கனில் மசாலா
நன்கு ஊறி, சுவை அருமையாக இருக்கும்.
* 3 மணிநேரம் கழித்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் நன்கு சூடானதும், அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை
சேர்த்து, மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக 7-8 நிமிடம் வேக வைத்து
எடுத்தால், சுவையான மற்றும் மசாலா உதிராத தட்டுக்கடை சிக்கன் ப்ரை
தயார்.



Click it and Unblock the Notifications