Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா தஞ்சாவூர் கொத்சு செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்
Thanjavur Vengaya Gotsu Recipe in Tamil: உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசைதான் அடிக்கடி செய்கிறீர்களா? இட்லி, தோசைக்கு பொதுவாக சட்னி அல்லது சாம்பார்தான் செய்வீர்களா? ஒரே மாதிரி சட்னி செய்து உங்களுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் போரடித்து விட்டதா? புதிதாக என்ன சைடிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1 கப் சின்ன வெங்காயம் உள்ளதா? அப்படியானால் அந்த சின்ன வெங்காயத்தை வைத்து தஞ்சாவூர் ஸ்டைல் வெங்காய கொத்சு செய்யுங்கள்.

இந்த சின்ன வெங்காய கொத்சு செய்வதற்கு மிகவும் எளிதாக இருப்பதோடு மிகவும் சுவையானதாகவும் இருக்கும். இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். ஒரே மாதிரி சட்னி சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்.
உங்களுக்கு தஞ்சாவூர் ஸ்டைல் சின்ன வெங்காய கொத்சை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தஞ்சாவூர் சின்ன வெங்காய கொத்சு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 டஸ்பூன் கடுகு
- 1 வர மிளகாய்
- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1/2 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 கப் புளிக்கரைசல்
- 1 ஸ்பூன் சாம்பார் பொடி
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 சிட்டிகை பெருங்காயத்தூள்
- 1/4 கப் வேகவைத்த பாசிப்பருப்பு
- தேவையான அளவு தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய் மற்றும் கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- பருப்பு பொன்னிறமாக மாறியதும், 1 கப் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். இந்த ரெசிபிக்கு சின்ன வெங்காயம்தான் நன்றாக இருக்கும்.
- சிறிதளவு உப்பு சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் புளிக்கரைசலை சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து, 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- இப்போது வேகவைத்த பாசிப்பருப்பை இதனுடன் சேர்க்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- நன்றாகக் கலந்து 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- இறுதியாக சிறிது கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்தால் சுவையான தஞ்சாவூர் ஸ்டைல் சின்ன வெங்காய கொத்சு ரெடி
- இது இட்லி, தோசை, வெண்பொங்கல் என அனைத்துடனும் பக்காவான காம்போவாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
