Latest Updates
-
இன்றைய ராசிபலன் 02 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க மனஅழுத்தத்தால் கஷ்டப்பட போறாங்களாம் -
சந்திரன் மகர ராசிக்குள் நுழைவதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்தும், கஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
பெங்களூர் ஸ்டைல் இட்லி சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க -
சனிபகவான் மீன ராசியில் வக்ரமடைவதால் இந்த 4 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையாகப் போறாங்களாம் -
1/2 கப் கடலைப்பருப்பும், கீரையும் இருந்தா ஈவ்னிங் டைம் இந்த ஸ்னாக்கை செய்யுங்க - டக்கரா இருக்கும் -
1000 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் எரியும் இந்தியாவின் மர்மமான கோவில் தீபம் - எந்த ஊரில் இருக்கு தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்..
தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Thanjavur Orappu Adai With Peanut Chutney Recipe In Tamil: தினமும் ஒரே மாதிரி இட்லி, தோசை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் காலை டிபனை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படையை செய்து சாப்பிடுங்கள். இந்த ஒரப்படைக்கு தேங்காய் சேர்க்காத வேர்க்கடலை சட்னியை செய்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். ஒருமுறை இந்த டிபனை செய்து கொடுத்தால், நிச்சயம் வாரம் ஒருமுறை உங்கள் காலை டிபன் மெனுவில் இதை சேர்த்துக் கொள்வீர்கள்.

உங்களுக்கு இந்த தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படையும், வேர்க்கடலை சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படை மற்றும் வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஒரப்படைக்கு...
* இட்லி அரிசி - 1 கப்
* மாவு பச்சரிவு - 1 கப்
* கடலைப் பருப்பு - 1 கப்
* துவரம்பருப்பு - 1 கப்
* கருப்பு உளுந்து - 1 கப்
* வரமிளகாய் - 5
* சோம்பு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தேங்காய் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* சுரைக்காய் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 25 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சட்னிக்கு...
* வேர்க்கடலை - 75 கிராம்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 8
* பூண்டு - 5
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, மாவு பச்சரிசி, கடலைப்
பருப்பு, துவரம் பருப்பு, கருப்பு உளுத்தம் பருப்பை எடுத்து, நீரில்
2-3 முறை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் நீரை ஊற்றி, 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 4 மணிநேரம் கழித்து, மிக்சர் ஜாரில் வரமிளகாய், சோம்பு சேர்த்து
முதலில் ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்துள்ள அரிசி பருப்பை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி கொரகொரவென்று, சற்று கெட்டியாக அரைத்து ஒரு பாத்திரத்தில்
எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக அதிக நீரை ஊற்றிவிட
வேண்டாம்.
* பின்பு அதில் பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய
தேங்காய், சுரைக்காய், சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை
சேர்த்து நன்கு கலந்து, மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* அதற்குள் சட்னி அரைத்துவிடலாம். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில் வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வேர்க்கடலை மற்றும் வதக்கிய பொருட்களை
சேர்த்து, சிறிய துண்டு புளி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
* அடுத்து சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கலந்தால், சுவையான தேங்காய் சேர்க்காத வேர்க்கடலை சட்னி தயார்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை நன்கு கலந்துவிட்டு, 1 கரண்டி மாவை
வாணலியில் உள்ள எண்ணெயில் ஊற்றி, லேசாக அடை போன்று கரண்டியால்
தேய்த்து, குறைவான தீயில் வைத்து, முன்னும் பின்னும் பொன்னிறமாகும்
வரை வேக வைத்து எடுத்தால், சுவையான தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படை
தயார்.
ஊட்டச்சத்து மதிப்புகள்
1 பெரிய அடை + 3 டேபிள் ஸ்பூன் சட்னியில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு பின்வருமாறு:
* கலோரிகள் : 320-350 kcal (பருப்புகள் மற்றும் வேர்க்கடலை இருப்பதால் நல்ல ஆற்றல் தரும்)
* புரதச்சத்து : 11-13 கிராம் (மிக மிக அதிகமான தாவரவகை புரதம்)
* கார்போஹைட்ரேட் : 40-44 கிராம் (சிக்கலான கார்ப்ஸ் - மெதுவாக ஜீரணமாகும்)
* நார்ச்சத்து : 7-8 கிராம்
* கொழுப்பு : 11-13 கிராம் (அடை சுடப் பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் வேர்க்கடலையிலிருந்து)
ஒரப்படையின் ஆரோக்கிய நன்மைகள்:
* ஒரப்படையில் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, கருப்பு உளுந்து
போன்ற மூன்று விதமான பருப்புக்கள் இருப்பதால், புரோட்டீன் அதிகம்
நிறைந்த உணவாகும்.
* இந்த அடையில் நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய்
சேர்க்கப்பட்டுள்ளதால், இது உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
மேலும் இது சிறுநீரக ஆரோக்கியத்திற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும்
(Weight Loss) மிகவும் நல்லது.
* வெள்ளை அரிசி குறைவாக சேர்க்கப்பட்டு, பருப்புக்கள் அதிகம்
சேர்க்கப்பட்டுள்ளதால், இது ரத்தத்தில் சர்க்கரை அளவை சட்டென்று
உயர்த்தாது.



Click it and Unblock the Notifications